மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் அணித் தலைவராக இளம் துடுப்பாட்ட வீரர் ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரை நிர்வாண சர்ச்சை: கிரிஸ் கெயிலுக்கு நான்கு கோடி நட்ட ஈடு
அவுஸ்திரேலியாவின் பெயார்ஃபெக்ஸ் (Fairfax Media) ஊடக நிறுவனத்துக்கு எதிராக ….
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 15 பேர் கொண்ட குழாம் இன்றைய தினம் (05) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழாத்திலிருந்து ஜேசன் ஹோல்டர் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், முதன் முறையாக அணியின் தலைவராக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோவ்மன் பவல் இறுதியாக விளையாடிய இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் ஐந்து போட்டிகளிலும், மொத்தமாக 61 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். எனினும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T10 லீக்கில் 226.92 என்ற ஓட்ட வேகத்தில் 177 ஓட்டங்களை குவித்திருந்தார். இதில் 21 பந்துகளுக்கு 65 ஓட்டங்களையும் விளாசி, நோர்தென் வொரியர்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வெற்றிபெறவும் செய்திருந்தார்.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளின் அனுபவ இடதுகை துடுப்பாட்ட வீரர் டெரன் பிராவோ, சுமார் 2 வருடங்களுக்கு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். டெரன் பிராவோ இறுதியாக 2016 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். இவருடன், சகலதுறை வீரர்களான ரொஸ்டன் சேஸ் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவர் கார்லோஸ் பிராத்வைட் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள அணி தொடர்பிலும், டெரன் பிரோவோவின் வருகை தொடர்பிலும் கருத்து வெளியிட்ட தேர்வுக்குழுத் தலைவர் கோர்ட்ணி பிரவுண், “ஜேசன் ஹோல்டர் அணியிலிருந்து வெளியேறியிருந்தாலும், எம்மிடம் போட்டித் தன்மையுடைய பலமான அணியொன்று உள்ளதாக நம்புகிறோம். குறிப்பாக டெரன் பிராவோ அணிக்கு திரும்பியுள்ளமை மேலும் பலமாகும். ஜேசன் ஹோல்டர் அணியில் இல்லாத தருணத்தில், பிராவோவின் அனுபவம் மற்றும் துடுப்பாட்டம் அணிக்கு மேலும் பலத்தை அளிக்கும்” என்றார்.
2-1 என ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இந்திய அணி
இன்று (29) மும்பையில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு …..
பங்களாதேஷ் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை 2-0 என பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது போட்டியும் டாக்காவில் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இறுதி ஒருநாள் போட்டி 14 ஆம் திகதி சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<