இறுதி டெஸ்டின் ஐந்தாவது நாளும், திக்வெல்ல – ரொஷேன் ஜோடியும்

2505
Roshen Silva and Dickwella

தனது சாமர்த்தியமான செயற்பாடுகளை பயன்படுத்தி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை சமநிலைப்படுத்த முக்கிய பங்கு வகித்த இலங்கையின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல அதற்காக இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லியிடம் பாராட்டை வாங்கியிருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டி போன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியை சமப்படுத்துவதிலும் திக்வெல்லவின் பங்களிப்பு இலங்கை அணிக்கு கிடைத்திருந்தது.  

மூன்றாவது டெஸ்டின் முடிவு  – தனன்ஞயவின் சதத்தோடு டெல்லி டெஸ்டை சமப்படுத்திய இலங்கை

இப்போட்டியில் இந்தியாவினால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த கடின இலக்கான 410 ஓட்டங்களினை பெறுவதற்கு இலங்கை அணி வசதியான நிலையொன்றினை எட்டியபோது அந்த இலக்கினை அடைய இளம் துடுப்பாட்ட நட்சத்திரம் திக்வெல்ல எடுத்துக்கொண்ட சிரத்தைகள் பற்றி, அவருடன் சக துடுப்பாட்ட வீரராக களத்தில் நின்ற டெஸ்ட் அறிமுக வீரர் ரொஷேன் சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் போட்டியின் வெற்றி இலக்கினை எட்டும் எண்ணத்தோடு காணப்பட்டார். எங்களுக்கு போட்டி முடிவடைய 50 நிமிடங்களுக்குள் 117 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது. எனவே, திக்வெல்ல என்னிடம் வாங்கள் நாம் இதனை செய்து (போட்டியின் வெற்றி இலக்கினை அடைந்து) வரலாறு படைப்போம் என்றார்  என ரொஷேன் சில்வா கூறியிருந்தார்.

140 வருடகால வரலாற்றினைக் கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு தடவை மாத்திரமே 400 ஓட்டங்களை விட அதிகமாக இரண்டாவது இன்னிங்சில் நிர்ணயம் செய்யப்பட்ட வெற்றி இலக்கொன்று அணியொன்றினால் வெற்றிகரமாக தாண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனை விட, சதம் கடந்து சிறந்த முறையில் ஆடிக்கொண்டிருந்த தனன்ஞய டி சில்வா உபாதையினால் மைதானத்தை விட்டு வெளியேறிய காரணத்தினால் திக்வெல்ல – ரொஷேன் ஜோடிக்க அணியைக் காப்பாற்ற வேண்டிய ஒரு பாரிய சுமை எழுந்தது.

இப்போட்டியில் மொத்தமாக 74 ஓட்டங்களைப் பெற்ற அறிமுக வீரரான ரொஷேன், தனக்கு கன்னிப் போட்டியில் இந்தியா போன்ற பலம்கொண்ட அணியொன்றுக்கு எதிராக சதம் பெறுவது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு செலயலாக மாறும் என்பதையும் சக துடுப்பாட்ட வீரரான திக்வெல்ல குறிப்பிட்டதாக ரொஷேன் கூறியிருந்தார்.  

எப்போதுமே (திக்வெல்ல) அவர் நேரணுகுமுறை கொண்ட ஒருவர். ஆரம்ப போட்டியில் சதம் பெறுவது, அதுவும் இந்தியாவுக்கு எதிராக பெறுவது பெரிய தாக்கங்களை கொண்டு வரும் என அவர் எண்ணியிருந்தார். இப்படியாக எப்போதும் போட்டியில் மாற்றங்களை கொண்டுவர விரும்பும் ஒருவர் அவர். அவர் போல எனக்கு விளையாட முடியாது. அவரது துடுப்பாட்ட முறைகளும் பிரம்மிக்க வைக்கின்றது. “  என்றார்.

டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் அதிரடி மாற்றங்கள்

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான..

தனிநபர் ஒருவரின் சொந்த சாதனைக்காக விளையாடுவது சில வேளை எதிரணிக்கு போட்டியின் சாதகத்தினை கொடுத்துவிட முடியும் என்பதற்காகத்தான் தான் சதம் பெறும் நோக்கினை தவிர்த்து போட்டியினை சமநிலைப்படுத்துவதிலேயே முழுக்கவனத்துடன் காணப்பட்டதாக ரொஷேன் சில்வா பின்னர் தெரிவித்திருந்தார்.  

இலங்கை அணியின் வளர்ந்துவரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான திக்வெல்ல தனது தாயகத்துக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை தேடிக்கொடுப்பதில் அதிக முனைப்புக் காட்டும் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதற்கு முன்னர், திக்வெல்ல தனுஷ்க குணத்திலக்க ஜோடி இணைந்து, கடந்த ஜூலை மாதம் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகவும், எந்தவொரு விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாகவும் 200 ஓட்டங்களை தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் கடந்து ஒரு நாள் போட்டிகளில் உலக சாதனை ஒன்றை பதிவு செய்திருந்தமை நினைவுகூறத்தக்கது.  

நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் திக்வெல்ல 44 ஓட்டங்களினை குவித்து ஆட்டமிழக்காமல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

எவ்வாறிருப்பினும் இலங்கை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரராக மாறியிருக்கும் இளம் திக்வெல்ல, உலக அரங்கில் ஒரு அவதானத்தைப் பெற்ற வீரராகவும் மாற்றம் பெற்றுள்ளார்.