உபாதை காரணமாக இலங்கை தொடரை இழக்கும் ரோரி பேர்ன்ஸ்

152
Rory Burns

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோரி பேர்ன்ஸ் இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி தற்போது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில், முதல் போட்டியில் தோல்வியடைந்த போதும், இரண்டாவது போட்டியில் வெற்றிக்காக போராடி வருகின்றது.

டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை படைத்த ரொஸ் டெய்லர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றிருந்த ரோரி பேர்ன்ஸ், அந்த அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதான பயிற்சியின் போது, கணுக்கால் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். இவர் பயிற்சியின் போது, கால்பந்து விளையாடிய போதே உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார். 

குறித்த உபாதைக்கான பரிசோதனைகளை மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் சபை, அவருக்கு உடனடியாக கணுக்கால் பகுதியில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவரால் நான்கு மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, ரோரி பேர்ன்ஸ் இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தை 3-0 என வைட்வொஷ் செய்த அவுஸ்திரேலியா!

சுற்றுலா நியூசிலாந்துக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 279 ஓட்டங்கள்

கடந்த காலங்களில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டத்தை வலுப்படுத்திவந்த இவரின் இழப்பு இங்கிலாந்து அணிக்கு மிகவும் பாரதூரமான விடயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோரி பேர்ன்ஸ் இங்கிலாந்து அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 6 அரைச் சதங்கள் உட்பட 979 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் மார்ச் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க