ஹேரத் மற்றும் ரூட் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்

2640

அண்மையில் நிறைவடைந்த டெஸ்ட் போட்டிகளில் வெளிக்காட்டிய திறமையின் காரணமாக இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் மற்றும் இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகியோர், முறையே துடுப்பாட்ட வீரர்களுக்கான மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடங்களுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தியாவுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பெற்றுக் கொண்ட 124 மற்றும் 4 என்ற ஓட்ட எண்ணிக்கைகளுடன், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை பின்தள்ளிய ஜோ ரூட் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டார். 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தரவரிசையின் முதல் இடத்திலிருந்த ரூட், தற்போது 847 புள்ளிகளுடன் வில்லியம்சனை விட 3 புள்ளிகள் முன்னிலையிலும், முதலிடத்திலுள்ள ஸ்டீவ் ஸ்மித்தைவிட 42 புள்ளிகள் பின்னிலையிலும் உள்ளார்.

இந்தியத் தொடரில் சதங்கள் விளாசிய அலஸ்டயர் குக் ஒரு இடம் முன்னேறி 10ஆவது இடத்திலும், மொயின் அலி 6 இடங்கள் முன்னேறி 26ஆவது இடத்திலும், பென் ஸ்டோக்ஸ் 8 இடங்கள் முன்னேறி 32ஆவது இடத்திலும் உள்ளனர். தனது முதல் போட்டியிலே பலரது கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர் ஹஸீப் ஹமீட் 64ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Rootஇந்திய வீரர்களை பொறுத்தமட்டில் சேதஸ்வர் புஜாரா 11ஆவது இடத்திற்கும், அணித்தலைவர் விராட் கோஹ்லி 14 ஆவது இடத்திற்கும், முரளி விஜய் 23 ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் திறமையை வெளிக்காட்டிய இலங்கை வீரர் தனஞ்சய டி சில்வா (30 ஆவது), ஜிம்பாப்வே வீரர்களான கிரேக் எர்வின் (56 ஆவது) மற்றும் ஷோன் வில்லியம்ஸ் (71 ஆவது) ஆகியோரும் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஜிம்பாப்வே உடனான இரண்டாவது போட்டியில் 152 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ரங்கன ஹேரத், தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் மற்றும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோரை பின்தள்ளி டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஹேரத் 2012ஆம் மற்றும் 2014ஆம் ஆண்டுகளின்போதும் இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்தார். எனினும், தற்போது அவர் பெற்றுக்கொண்டுள்ள 867 புள்ளிகளே அவரால் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிக புள்ளிகளாகும். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வினை  விட ஹேரத் 14 புள்ளிகள் பின்னிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய பென் ஸ்டோக்ஸ் இரண்டாம் நிலையிலுள்ள ஷகிப் அல் ஹசனை விட 56 புள்ளிகள் பின்னிலையிலும், முதல் நிலையிலுள்ள அஷ்வினை விட 106 புள்ளிகள் பின்னிலையிலும் உள்ளார்.

Herathசர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் (நவம்பர் 14 ஆம் திகதி உள்ளவாறு)

துடுப்பாட்ட வீரர்கள்

முதல் 10

நிலை  (+/-) வீரர் அணி புள்ளிகள் சராசரி உச்ச தரவரிசை புள்ளிகள்
1   – ஸ்டீவ் ஸ்மித்      அவுஸ்திரேலியா  886  57.40 936 (2015)
2 (+1) ஜோ ரூட் இங்கிலாந்து 844 53.55 917 (2015)
3 (-1) கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 841 50.31 893 (2015)
4  

 யூனிஸ் கான் பாகிஸ்தான்  832 53.98 880 (2009)
5 (+1) ஹஷிம் அம்லா தென்னாபிரிக்கா 803 50.47 907 (2013)
6 (+1) AB டிவிலியர்ஸ் தென்னாபிரிக்கா 794 50.46 935 (2014)
7 (+1) டேவிட் வோர்னர் அவுஸ்திரேலியா 793 48.98 880 (2015)
8 (+1) அடம் வோஜஸ் அவுஸ்திரேலியா 778 67.40 824 (2016)
9 (-4) அஜின்க்யா ரஹானே இந்தியா 777 49.40 825 (2016)
10 (+1) அலஸ்டயர் குக் இங்கிலாந்து 765 47.12 874 (2012)

ஏனைய முக்கிய தரவரிசை மாற்றங்கள்

நிலை (+/-) வீரர் அணி புள்ளிகள் சராசரி உச்ச தரவரிசை புள்ளிகள்
11 (+2) சேதஸ்வர் புஜாரா இந்தியா 745  49.95 851 (2013)
14 (+1) விராட் கோஹ்லி இந்தியா 725 46.11 784 (2014)
23 (+2) முரளி விஜய் இந்தியா 661 40.82 747 (2015)
26 (+6) மொயின் அலி இங்கிலாந்து 631 35.38 631 (2016)
30 (+6) தனஞ்சய டி சில்வா இலங்கை 612 61.11 612 (2016)
32 (+8) பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 602 35.70 602 (2016)
56 (+20) கிரேக் எர்வின் சிம்பாப்வே 454 33.50 454 (2016)
64 (புதிது) ஹஸீப் ஹமீட் இங்கிலாந்து 413 56.50 413 (2016)
71 (+21) ஷோன் வில்லியம்ஸ் சிம்பாப்வே 390 30.33 390 (2016)

பந்து வீச்சாளர்கள் தரவரிசை

முதல் 10 இடங்கள்

நிலை (+/-) வீரர்     அணி        புள்ளிகள் சராசரி உச்ச தரவரிசை புள்ளிகள்
1   – ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தியா 881 24.99 900 (2016)
2 (+2) ரங்கன ஹேரத் இலங்கை 867 27.98 867 (2016)
3 (-1) டேல் ஸ்டெய்ன் தென்னாபிரிக்கா 861 22.30 909 (2014)
4 (-1) ஜேம்ஸ் அண்டர்சன் இங்கிலாந்து 844 28.28 884 (2016)
5 (+1) யாசிர் ஷாஹ் பாகிஸ்தான் 820 27.37 878 (2016)
6 (-1) ஸ்டுவர்ட் ப்ரோட் இங்கிலாந்து 805 28.64 880 (2016)
7   – ரவீந்திர ஜடேஜா இந்தியா 796 24.23 809 (2016)
8   – மிச்சேல் ஸ்டார்க் அவுஸ்திரேலியா 777 27.76 792 (2016)
9   – ஜோஷ் ஹேஸல்வுட் அவுஸ்திரேலியா 732 26.95 792 (2015)
10   – நீல் வெக்னர் நியூசிலாந்து 731 29.63 760 (2016)

ஏனைய முக்கிய தரவரிசை மாற்றங்கள்

நிலை (+/-) வீரர்  அணி புள்ளிகள் சராசரி உச்ச தரவரிசை புள்ளிகள்
39 (+1) சுரங்க லக்மால் இலங்கை 401 47.65 405 (2016)
61 (+17) ஆதில் ரஷீட் இங்கிலாந்து 249 42.86 249 (2016)
65 (+11) கார்ல் மும்பா சிம்பாப்வே 223 37.25 223 (2016)
66 (+15) க்ரேம் கிரீமர் சிம்பாப்வே 221 52.00 270 (2005)
83 (+16) டொனால்ட் திரிபானோ சிம்பாப்வே 144 52.44 144 (2016)

சகலதுறை வீரர்கள்

முதல் 05 இடங்கள்

நிலை (+/-) வீரர்  அணி புள்ளிகள் உச்ச தரவரிசை புள்ளிகள்
1   – ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தியா 455 455 (2016)
2   – ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் 405 419 (2014)
3 (+1) பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 349 349 (2016)
4 (-1) மொயின் அலி இங்கிலாந்து 347 347 (2016)
5  – ரவீந்திர ஜடேஜா இந்தியா 296 296 (2016)