ரொனால்டோ-மெஸ்ஸி விவாதத்தில் பதிலளித்த பெக்கம், ரூனி

187

கால்பந்து உலகில் தற்போது தீவிரமாக விவாதிக்கப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு டேவிட் பெக்கம் மற்றும் வெயின் ரூனி இருவரும் தமது பதிலை அளித்துள்ளனர்.  

இதில் இந்த இருவருமே ரொனால்டோவை விட மெஸ்ஸியே உலகின் சிறந்த வீரர் என்று பதிலளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் வீரர்களை நன்கொடை செய்ய தூண்டிய ரொனால்டோ

போர்த்துக்கல் அணி ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் ……

கடந்த 2003 ஆம் ஆண்டு ரொனால்டோ மன்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்ததோடு அதே ஆண்டிலேயே பெக்கம் மன்செஸ்டரில் இருந்து ரியல் மெட்ரிட் அணிக்குச் சென்றார்.  

மறுபுறம் 2004 தொடக்கம் 2009 வரை ஐந்து ஆண்டுகள் ரூனி மற்றும் ரொனால்டோ இருவரும் யுனைடட் அணியில் சக வீரர்களாக இருந்தனர். இருவரும் அலெக்ஸ் பெர்கியுசனின் பயிற்சியின் கீழ் அந்த அணியில் முக்கிய வீரர்களாக இருந்து 2008இல் ப்ரீமியர் லீக்கை வெல்லவும் உதவினர்.   

எவ்வாறாயினும் கடந்த 15 ஆண்டுகளில் கால்பந்து உலகில் முன்னணி  வீரர்களாக மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. மெஸ்ஸி தனது தொழில்முறை கால்பந்து வாழ்வில் ஆரம்பம் தொடக்கம் இன்று வரை ஸ்பெயினின் பார்சிலோனா கழகத்திற்காக ஆடி வருகிறார்.  

ஆனால், ரொனால்டோ தற்போது ஜுவன்டஸ் அணிக்காக ஆடியபோதும் அதற்கு முன்னர் ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் போன்று இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடட் அணிக்காகவும் ஆடியுள்ளார்

பிஃபா தரவரிசையில் இறுதி நிலைகளுக்கு நகரும் இலங்கை அணி

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) வெளியிட்டுள்ள கால்பந்து ……

இதில் பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான போட்டிகளில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ எதிரெதிர் அணிகளில் இருந்ததால் அவர்களில் சிறந்த வீரர் யார் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.  

இந்த இருவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது கால்பந்து உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய கேள்வியாக தற்போது மாறியுள்ளது. அது தொடர்பில் அவதானிகள், பயிற்சியாளர்கள், வீரர்கள் அதேபோன்று கால்பந்து ரசிகர்கள் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்

இந்நிலையிலேயே இங்கிலாந்து அணியின் முன்னாள் முன்னணி வீரர்களான பெக்கம் மற்றும் ரூனி இருவரும் இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.  

இது தொடர்பில் பெக்கம் கருத்து வெளியிடும்போது கூறியதாவது

வீரர் ஒருவராக மெஸ்ஸியின் தரத்தில் உள்ளவர் மெஸ்ஸி மாத்திரம் தான். அவரது தரத்தில் வேறு ஒருவர் இருக்கிறார் என்று கூறுவது ஒருபோதும் நடக்காத ஒன்று. ரொனால்டோ அவரளவுக்கு இல்லாதபோதும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ வேறு எந்த வீரர்களை விடவும் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்

ஆர்ஜன்டீன அரச செய்தி நிறுவனமான Telam இற்கு கருத்துத் தெரிவிக்கும்போதே ரொனால்டோவை விடவும் மெஸ்ஸி சிறந்தவர் என்று பெக்கம் குறிப்பிட்டிருந்தார்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் பட்டம், ப்ரீமியர் லீக் மற்றும் லா லிகா பட்டங்களையும், 1999 இல் பல்லோன் டிஓர் விருதில் இரண்டாவது இடத்தையும் பெற்ற பெக்கம் கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதோடு தற்போது அவர் அமெரிக்காவில் இன்டர் மியாமி கால்பந்து கழகத்தின் உரிமையாளராக உள்ளார். இதில் அவர் ரொனால்டோ ஆடிய மன்செஸ்டர் யுனைடட் மற்றும் ரியல் மெட்ரிட் அணியில் அங்கம் வகித்தபோதும் மெஸ்ஸியை தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

மறுபுறம் இந்தக் கேள்விக்கு ரூனி இங்கிலாந்தின்தி டைம்ஸ்பத்திரிகைக்கு பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

நாம் ஒன்றாக விளையாடும் காலத்தில் ரொனால்டோ இப்போது போல் கோல் பெற ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அப்போது கூட உலகின் சிறந்த வீரராக மாற வேண்டும் என்ற தேவை அவரிடம் இருந்ததை நாம் பார்த்தோம். அவர் அதிகம் பயிற்சி பெற்றே நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டார். அவர் இன்று சிறந்த கோல்களை பெறும் ஒருவராக மாறியுள்ளார். ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றில் தோன்றிய சிறந்த வீரர்கள் இருவர்.  

ரொனால்டோ எனது நல்ல நண்பன் என்றபோதும் நான் இங்கு மெஸ்ஸியையே தேர்வு செய்கிறேன். அது நான் எக்சாவி மற்றும் போல் ஸ்கோல்ஸை விரும்புவதன் காரணமாகும். மெஸ்ஸி போட்டியின்போது செய்கின்ற மாறுபட்ட விடயங்கள் அதற்குக் காரணம். மெஸ்ஸி ஒருபோதும் தனது உச்ச பலத்தை பயன்படுத்தி கோல் பெறுவதாக எனக்கு ஞாபகமில்லை. அவர் மிக சாதாரணமாக பந்தை கோல் கம்பத்திற்குள் செலுத்துகிறார். கால்பந்து விளையாட்டு அவருக்கு சாதாரணமாக இலகுவான ஒன்று போன்று உள்ளது என்றார்.      

PSG இன் வளர்ச்சிக்கு பங்களித்த நெய்மாருக்கு குவியும் பாராட்டு

பிரான்ஸின் முன்னணி கால்பந்து கழகங்களில் ஒன்றான பரிஸ் செயிண்ட் ………

இதன்போது மெஸ்ஸி கால்பந்து ஆடும் முறை பற்றி ரூனி சுவாரஷ்யமாக விபரித்தார்.  

ரொனால்டோ கோல் எல்லைக்கு அருகில் மிகப் ஆபத்தானவர். அவர் பயங்கரமாக இருப்பார். ஆனால் மெஸ்ஸி உங்களை கொல்வதற்கு முன் அதிகம் துன்புறுத்துவார். மெஸ்ஸி விளையாடும் பாணி மூலம் அவர் அதிக மகிழ்ச்சி அடைவது போன்று எமக்கு தெரிகிறது. அவர்கள் பதிவு செய்திருக்கும் கோல் எண்ணிக்கை அடிப்படையில் அவர்கள் இருவரும் கால்பந்து விளையாட்டை முழுமையாக மாற்றியுள்ளனர். அதனை எப்போதும் யாராலும் சமப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.” 

ரூனி தற்போது இங்கிலாந்தின் EFL Championship தொடரின் அணி ஒன்றான டெர்பி கவுன்டி அணிக்காக ஆடுவதோடு அவர் மொத்தம் 253 கோல்களை பெற்று மன்செஸ்டர் யுனைடட் அணி வரலாற்றில் அதிக கோல்களை பெற்றவருக்கான சாதனையையும் படைத்துள்ளார். அவர் அந்த அணியுடன் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், ப்ரீமியர் லீக் பட்டங்கள் உட்பட பல கிண்ணங்களையும் வென்றுள்ளார். எனினும், ரொனால்டோவுடன் பல ஆண்டுகள் ஒன்றாக ஆடிய நிலையிலேயே ரூனி, மெஸ்ஸியை விட சிறந்த வீரராக தேர்வு செய்துள்ளார்

கடந்த 12 ஆண்டுகளில் 11 தடவைகள் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பல்லோன் டிஓர் விருதை மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் பரஸ்பரம் வெற்றி கொண்டுள்ளனர். இது இவர்கள் தற்போதுள்ள சிறந்த கால்பந்து வீரர்கள் என்பதை உறுதி செய்வதாக உள்ளது.    

எனவே மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இடையே சிறந்த வீரர் யார் என்ற விவாதம் தொடர்ந்து நீடிக்கும்  அதேவேளை பல்வேறு கருத்துகள் வெளியாகும் என்றபோதும் அவர்கள் இருவரும் சம காலத்தில் விளையாடுவதை பார்க்கக் கிடைத்தது கால்பந்து ரசிகர்களின் அதிர்ஷ்டமாகும்.    

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<