தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ரோஹித் சர்மா – மாயங்க் அகர்வால் ஜோடி பல சாதனைகளை முறியடித்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
முதல் விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் பல சாதனைகளை முறியடித்த நிலையில், உலகில் இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக எந்த ஆரம்பத் துடுப்பாட்டத்துக்காகக் களமிறங்கிய ஜோடியும் நிகழ்த்தாத சாதனைகளையும் படைத்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் நேற்றுமுன்தினம் (02) ஆரம்பமாகிய இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 502 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.
லாஹூர் T20 யில் எதுவும் நடக்கலாம்
சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று
இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா 176 ஓட்டங்களையும், மயங்க் அகர்வால் 215 ஓட்டங்களையும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்காக 317 ஓட்டங்களைச் சேர்த்து டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை படைத்தது.
உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி 300 ஓட்டங்களுக்கு மேல் குவிப்பது இது மூன்றாவது முறையாகும். இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா – மயங்க் அகர்வால் முதன்முறையாக இணைந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக தன் முதல் டெஸ்டில் விளையாடியதுடன், மயங்க் அகர்வால் இந்திய மண்ணில் தன் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
47 வருட சாதனை
இந்திய மண்ணில் 47 வருடங்கள் கழித்து தங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும் விளையாடிய சந்தர்ப்பமாக இது பதிவாகியது. முன்னதாக, 1972இல் சுனில் கவாஸ்கர் – ராம்நாத் பார்க்கர் ஜோடி இந்திய மண்ணில் தங்கள் முதல் டெஸ்டில் ஒரே நேரத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக விளையாடினர்.
அதாவது, இந்த இரண்டு வீரர்களும் இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இதுவே இரண்டு வீரர்களும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக முதல் முறை ஒரே நேரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இளம் வீரர்களின் பிரகாசிப்பால் பறிபோகுமா முன்னணி வீரர்களின் வாய்ப்பு? Cricket Kalam 32
இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம்
சதம் கடந்து சாதனை
ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்த நிலையில், அதிலும் ஒருசில சாதனைகளையும் படைத்துள்ளனர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இதுவரை எதிரணியின் இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும் ஒரே போட்டியில் சதம் அடித்ததில்லை. அதை முதன்முறையாக ரோஹித் சர்மா – மயங்க் அகர்வால் ஜோடி முறியடித்தது.
அத்துடன், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே சதம் விளாசிய 4ஆவது இந்திய வீரர் ரோஹித் சர்மா ஆவார். ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் ஏற்கனவே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்
மூன்று வகையான சர்வதேச போட்டிகளிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சதம் அடித்த ஒரே இந்திய வீரர் ரோஹித் சர்மா ஆவார். ஒட்டுமொத்தத்தில் இந்த சாதனையைப் படைத்த 8ஆவது வீரராகவும் இவர் பதிவானார். கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்), பிரன்டன் மெக்கல்லம், மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து), திலகரத்ன டில்ஷான் (இலங்கை), அஹமட் ஷேசாத் (பாகிஸ்தான்), ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா), தமிம் இக்பால் (பங்களாதேஷ்) இந்தப் பட்டியலின் முந்தைய சாதனையாளர்கள் ஆவர்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் ரோஹித் சர்மா 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 சதங்கள், 5 அரைச் சதங்கள் உட்பட 884 ஓட்டங்களைக் (சராசரி 98.22) குவித்துள்ளார். இதன்மூலம், குறைந்தது 10 இன்னிங்சிஸ் விளையாடிய வீரர்களில் உள்ளூரில் சிறந்த சராசரியை கொண்டுள்ள டொன் பிராட்மெனின் சாதனையை (50 இன்னிங்சில் 4,322 ஓட்டங்கள், சராசரி 98.22) ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.
சங்கக்காரவும், ஹேரத்தும் என்னை ஈர்த்த வீரர்கள் – தென்னாபிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்காரவின் கிரிக்கெட் வாழ்க்கையை பின்பற்ற விரும்புவதாகத்
கூட்டணியாக அதிக ஓட்டங்கள்
மேலும், முதல் விக்கெட்டுக்கு 317 ஓட்டங்களைக் குவித்து இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி என்ற சாதனையையும் இவ்விருவரும் நிகழ்த்தினர். முன்னதாக, 1996-97ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களான கேரி கிர்ஸ்டன் – அன்ட்ரூ ஹட்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 236 ஓட்டங்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
அத்துடன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவைச் சேர்ந்த ஆரம்ப கூட்டணியின் அதிகபட்சம் 218 ஓட்டங்களாகும். கடந்த 2004ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கௌதம் கம்பீர் – ஷெவாக் இருவரும் இந்த சாதனையை வைத்திருந்தனர். ஆனால், தற்போது ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி அதை 15 வருடங்களுக்குக்குப்பின் 317 ஓட்டங்களை எடுத்து முறியடித்துள்ளனர்
மூன்றாவது இடம்
இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் முதல் விக்கெட்டுக்காக அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த கூட்டணியில் ரோஹித் – மயங்க் ஜோடி மூன்றாவது இடத்தை பிடித்தது.
நியூசிலாந்துக்கு எதிராக 1956இல் வினு மன்கட் – பங்கஜ் ராய் 413 ஓட்டங்களை எடுத்து முதலிடத்திலும், பாகிஸ்தானுக்கு எதிராக 2006இல் டிராவிட் – ஷெவாக் 410 ஓட்டங்களை எடுத்து இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 317 ஓட்டங்களை எடுத்து ரோஹித் – மயங்க் ஜோடி மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
மஹேலவின் அணியில் விளையாடவுள்ள ஜொப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) அடுத்த ஆண்டு நடாத்தவுள்ள அணிக்கு 100 பந்துகள் கொண்ட “த ஹன்ரட்” கிரிக்கெட் தொடரில்
இந்திய மண்ணில் இரண்டு பேரும் சதம்
இந்திய மண்ணில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக முதல் டெஸ்ட்டில் களமிறங்கிய இருவரும் சதம் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினர். மேலும், இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவர் 10ஆவது தடவையாக ஒரே போட்டியில் சதமடித்தனர்.
அத்துடன், மயங்க் அகர்வால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக சதமடித்த 86ஆவது வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயங்கின் இரட்டைச் சதம்
விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் 204 பந்துகளில் சதம் அடித்து, பிறகு சதத்தை இரட்டைச் சதமாக மாற்றி 215 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் தன் முதல் டெஸ்ட் சதத்தையே இரட்டைச் சதமாக மாற்றிய இந்திய வீரர்கள் சிலர் பட்டியலில் மயங்க் அகர்வால் இணைந்து கொண்டார்.
கடந்த 1965ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் திலிப் சர்தேசாய் 200 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று முதல் டெஸ்ட் சதத்தை இரட்டைச் சதமாக மாற்றினார்.
விநோத் காம்ப்ளி 1993ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் 224 ஓட்டங்களை எடுத்து முதல் சதத்தை இரட்டையாக மாற்றினார். அதேபோல கருண் நாயர் சென்னையில் தான் விளையாடிய முதல் டெஸ்ட் சதத்தை முச்சதமாக மாற்றினார். இந்தப் பட்டியலில் தற்போது மயங்க் அகர்வால் 215 ஓட்டங்களை எடுத்து சதத்தை இரட்டைச் சதமாக மாற்றியுள்ளார்.
புதிய பந்தில் அதிக விக்கெட்டுகள்
இந்தப் போட்டியின் 2ஆம் நாளான நேற்று (03) தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாப்பிரிக்கா அணி ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களை எடுத்தது. இந்த 3 விக்கெட்டுக்களில் 2 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்ற, ஜடேஜா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்த விக்கெட் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் புதிய பந்தில் எடுத்த 71ஆவது விக்கெட்டாகும். அதாவது அஸ்வின் 2011இல் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டது முதல் புதிய பந்தில் 71 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.
தொழில்சார் கிரிக்கெட் சங்கத்தின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார் பென் ஸ்டோக்ஸ்
உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின்
இந்தச் சாதனையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் ப்ரோட் முதலிடத்தில் உள்ளார். இவர் முதல் புதிய பந்தில் 107 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2ஆவது இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 106 விக்கெட்டுகளுடன் இருக்கிறார்.
3ஆவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் வேர்னண் பிலாண்டர் 76 விக்கெட்டுகளையும், நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் 75 விக்கெட்டுகளுடனும் இருக்கின்றனர். அஸ்வின் 71 விக்கெட்டுகளுடன் புதிய சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
ஜடேஜாவின் 200 விக்கெட்
போட்டியின் 3ஆவது நாளான இன்று (04) டீல் எல்கரின் விக்கெட்டை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.
டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட் மைல்கல்லை மிக விரைவில் எட்டிய முதல் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்திய வீரராக இடம்பிடித்தார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க