ஆஸி. அணிக்கு எதிராக விளையாட விரும்பும் ரோஹித் சர்மா

141
Rohit Sharma

சுற்றுலா இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இவ்வருட இறுதியில் நடைபெறவிருந்த தொடர் நடைபெறும் என இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையில் நடைபெற்ற இன்ஸ்ராகிராம் நேரடி கலந்துரையாடலின் போதே குறித்த விடயத்தினை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

சாதனை இணைப்பாட்டங்களின் ஜாம்பவான் மஹேல

இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆடி 537 ஓட்டங்களிற்கு..

கொவிட்-19 காரணமாக சர்வதேச கிரிக்கெட் முடங்கியுள்ளது. முன்னணி தொடர்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் பிற்போடப்பட்டுள்ளதுடன், T20 உலகக் கிண்ணம் மற்றும் அவுஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான தொடர்கள் என்பவை பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு முகங்கொடுத்துள்ளன.  

எனினும், இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடருக்காக பயணக் கட்டுப்பாட்டுகளை நீக்கும் கலந்துரையாடல்களில் இரண்டு கிரிக்கெட் சபைகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் இந்த தொடரை நடத்துவதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த தொடர் குறித்து ரோஹித் சர்மா கருத்து வெளியிடுகையில், “இவ்வருடம் நடைபெறவுள்ள ஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். இந்த வருடத்தில் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இரண்டு கிரிக்கெட் சபைகளும் முகாமைத்துவம் செய்யும் என எதிர்பார்க்கிறேன். அப்படி தொடர் நடைபெறுமாயின் அணிகளுக்கு சிறப்பான விடயமாக அமையும். கிரிக்கெட்டை பார்ப்போருக்கும் சிறப்பானதாகும்.

அதேநேரம் இதுபோன்ற தொடரை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்பதுடன், கிரிக்கெட் மீண்டும் ஆரம்பமாவதற்கு இந்த தொடர் மிகவும் சிறப்பானதாக அமையும்” என்றார்.

இதேவேளை, 2018-19 ஆண்டு பருவகாலத்தில் அவுஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் இந்திய அணி முதன்முறையாக வீழ்த்தி, தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், தன்னுடைய கடந்தகால ஞாபகங்களையும் ரோஹித் சர்மா பகிர்ந்துக்கொண்டார்.

“தனிப்பட்ட ரீதியில் அவுஸ்திரேலியாவுடன் விளையாடுவதை நான் விரும்புகிறேன். அவுஸ்திரேலியாவுடன் ஒவ்வொரு முறையும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதுவொரு வித்தியாசமான உணர்வு. கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, நாம் முதன்முறையாக தொடரை வென்றிருந்தோம். எனவே, அது எமது அணிக்கு நல்லதாக அமையும்.

எனக்கு தெரியும் நீங்கள் இருவரும் இல்லை (வோர்னர் மற்றும் ஸ்மித்). ஆனால், குறித்த தொடரில் எமது பந்துவீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்கள் எதனை செய்தார்கள் என்பதை புரிந்துக்கொள்ளும் போது, குறித்த விடயம் எமக்கு புத்துணர்ச்சியாக அமையும்” 

அதேநேரம், நடைபெறவிருந்த ஐ.பி.எல். தொடர் கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த தொடர் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் எந்தவிதமான தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், அவுஸ்திரேலிய தொடர் முக்கியமானது என ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

“ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் காலங்களில் நடக்கக்கூடும். ஆனால், எப்போது நடக்கும் என்பது தொடர்பில் சரியாக குறிப்பிடமுடியாது.  இந்த நிலைமை சரியானதும், ஐ.பி.எல். தொடர் நடக்குமா? இல்லையா? என்பதையும் சரியாக கூறமுடியாது. ஆனால், நான் அவுஸ்திரேலிய தொடருக்காக காத்திருக்கிறேன். 

ஜனவரி அல்லது பெப்ரவரி என எப்போது வேண்டுமானாலும் அவுஸ்திரேலிய தொடர் நடக்கலாம். அதற்காக காத்திருக்கிறேன். அவுஸ்திரேலியாவில் விளையாடுவதை நாம் விரும்புகிறோம்” என்றார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<