நேபாள நாட்டு கிரிக்கெட் வீரரான ரோஹித் பவுட்டெல் ஆகக் குறைந்த வயதில் அரைச்சதம் பெற்று சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை முறியடித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இரு தரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்றுக்காக விஜயம் செய்துள்ள நேபாள அணி அங்கு நேபாள கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் ஆடவுள்ளது.
இலகு வெற்றியுடன் ஒரு நாள் தொடரை சமன் செய்த பாகிஸ்தான்
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு …
சுற்றுப்பயணத்தில் முதல் தொடரான ஒருநாள் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. முதல் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணி 3 விக்கெட்டுகளினாலும், நேற்று முன்தினம் நடைபெற்ற (26) இரண்டாவது போட்டியில் நேபாள அணி 145 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து மொத்தமாக 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அதிக பட்ச ஓட்டங்களாக ரோஹித் பவுட்டெல் 55 ஓட்டங்களையும், கயேந்திரா மல்லா 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதில் அரைச்சதம் அடித்த நேபாள அணியின் இளம் துடுப்பாட்ட சகலதுறை வீரரான ரோஹித் பவுட்டெல் 28 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார். கிரிக்கெட் உலகில் இளம் வயதில் ஒருநாள் சர்வதேச அரங்கில் அரைச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையையே இவர் பெற்றுள்ளார்.
தற்போது ரோஹித் பவுட்டெல் கன்னி ஒருநாள் அரைச்சதத்தை அவரின் 16 வயது 146 நாட்களில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கால்பந்தாட்ட வாழ்க்கைக்கு ஏமாற்றத்துடன் விடைகொடுத்த உசேன் போல்ட்
மெய்வல்லுனர் அரங்கில் மகத்தான சாதனைகள் பல …
இதுவரை காலமும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது 213 நாட்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது கன்னி அரைச்சதம் பெற்றிருந்த சாதனையே இளம் வீரர் ஒருவர் பெற்ற அரைச்சதமாக இருந்தது.
இளம் வயதில் ஒருநாள் அரைச்சதம் பெற்ற இந்த சாதனையையே இதுவரையில் சர்வதேச கிரிக்கெட் உலகில் முறியடிக்கப்படாத 28 ஆண்டுகால சாதனையாக இருந்தது.
இதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் சஹீட் அப்ரிடி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றிருந்த போட்டியில் அவரது 16 வயது 217 நாட்களில் கன்னி அரைச்சதம் பெற்று இரண்டாவது வீரராக காணப்பட்டார்.
தற்போது இவர்கள் இருவரின் சாதனையையும் முறியடித்து நேபாள வீரர் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…