நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

New Zealand tour of India 2021

215
ICC

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப், டெஸ்ட் தொடருக்கான இந்தியா குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கிரிக்கெட் சபை அறிவித்துள்ள 16 பேர்கொண்ட குழாத்தின் தவைராக அஜின்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளதுடன், டெஸ்ட் தலைவராக செயற்பட்டுவரும் விராட் கோஹ்லி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியுடன் இணைந்துக்கொள்வார் எனவும், அவர் அணித்தலைவராக செயற்படுவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>>LPL தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை புதிய அறிவிப்பு

அதேநேரம் இந்த டெஸ்ட் குழாத்திலிருந்து, இந்திய அணியின் புதிய T20I தலைவர் ரோஹித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக இருந்துவந்த ஹனுமா விஹாரி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், ஷிரேயாஷ் ஐயர் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், ரிஷப் பண்ட் நீக்கப்பட்டுள்ள நிலையில், கே.எஸ்.பாரத் மற்றும் விரிதிமன் ஷா ஆகியோர் விக்கெட் காப்பாளராக பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் ஷமி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ள நிலையில், இஷாந்த் சர்மா, மொஹமட் ஷிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகள் முறையே, கான்பூர் மற்றும் மும்பையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய குழாம்

அஜின்கியா ரஹானே (தலைவர்), மயங்க் அகர்வால், செட்டேஸ்வர் புஜாரா (உப தலைவர்), சுப்மான் கில், ஷிரேயாஷ் ஐயர், விரிதிமன் ஷா, கே.எஸ்.பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் பட்டேல், ஜயண்ட் யாதவ், இஷாந்த் சர்மா, மொஹமட் ஷிராஜ், பிரசித் கிருஷ்ணா, விராட் கோஹ்லி (முதல் போட்டியில் ஓய்வு)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<