தென்னாபிரிக்க பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்த ரோப் வோல்டர்

31

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த ரோப் வோல்டர் தனது பதவியினை இராஜினமா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா

ரோப் வோல்டரின் பதவி ஒப்பந்தம் நான்கு வருடங்களாக அதாவது 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணம் வரை காணப்பட்ட போதிலும் அவர் இன்னும் இரண்டு வருடங்கள் குறிப்பிட்ட பதவிக்காலம் மீதமிருக்க தனது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.

வோல்டர் பதவி விலக அவரது சொந்தக் காரணங்கள் குறிப்பிடப்படுகின்ற போதிலும் நம்பக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வோல்டருக்கு தென்னாபிரிக்க அணி நிர்வாகம் வழங்கிய அதீத அழுத்தம் அவரது பதவி விலகலுக்கு காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது.

வோல்டரின் ஆளுகையிலான தென்னாபிரிக்க அணி T20 உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம் போன்ற தொடர்களில் சிறப்பாக செயற்பட்ட போதிலும் ஒருநாள் தொடர்களில் தென்னாபிரிக்க அணிக்கு மோசமான பதிவுகளே கிடைத்துள்ளது.

ரோப் வோல்டரின் பிரதியீடு தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத போதும் முன்னாள் தென்னாபிரிக்க சுழல்பந்துவீச்சாளர் ரொபின் பீடர்சன் அவரது பதவியினை எடுக்க அதிக சாத்தியப்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<