இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உடற்தகுதி ஆலோசகராக இங்கிலாந்தின் சசெக்ஸ் கிரிக்கெட் கழகத்தின் உடற்தகுதி மற்றும் மறுசீரமைப்பு ஆலோசகரான ரொப் சேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் பிரபல போர்ஸ்மட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள அவர், 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் சசெக்ஸ் அணியின் உடற்தகுதி ஆலோசகராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்கள் முக்கியமான போட்டித் தொடர்களின் போது உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அத்துடன் இலங்கை அணி வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் பல்வேறு குறைபாடுகளும் அவ்வப்போது காணக்கூடியதாக இருந்தன.
சுமதிபால மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் இலங்கை கிரிக்கெட்
இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால சூதாட்ட தொழிலில் ஈடுபட்டு வருதாக…
எனவே, இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற இத்தருணத்தில் அணி வீரர்களின் உடற்தகுதியை அதிகரிக்கும் நோக்கிலும், தொடர் உபாதைகளிலிருந்து வீரர்களை பாதுகாக்கும் நோக்கிலும் ரொப் சேவ்வின் உதவியைப் பெற்றுக்கொள்ள இலங்க கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு இராட்சியத்தில் பாகிஸ்தான் அணியுடனான தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கை வரவுள்ள ரொப் சேவ்வினது ஆலோசனைகள், இலங்கை அணி வீரர்களுக்கு பெரிதும் உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.