வீதி பாதுகாப்பு உலக T20 தொடரின் (லெஜன்ட்ஸ் T20 தொடரின்) இரண்டாவது பருவகாலத்திற்கான போட்டிகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> ஒருநாள் போட்டிகளில் பாரிய வீழ்ச்சியை கண்டதா இலங்கை?
முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்குபெறுகின்ற வீதி பாதுகாப்பு உலக T20 தொடர் இந்தியாவில் வீதி பாதுகாப்பு தொடர்பிலான அவதானம் ஒன்றினை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறுகின்றது.
கடந்த (2020) ஆண்டில் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த தொடர் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இந்த ஆண்டில் மீள நடாத்தப்பட்டு கடந்த வாரமே நிறைவுக்கு வந்திருந்தது.
மொத்தமாக ஆறு நாடுகளின் முன்னாள் வீரர்கள் கொண்ட அணிகள் பங்குபெற்றிய இந்த தொடரின் முதல் பருவகாலத்தில், இந்திய லெஜன்ட்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்ததோடு இலங்கை லெஜன்ட்ஸ் அணி இரண்டாம் இடம் பெற்றிருந்தது.
>> 2008க்குப் பிறகு முதல்முறையாக புதிய ஜேர்சியுடன் களமிறங்கும் CSK
இந்த நிலையில் ஊடக (Knockout Facebook) கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்ட இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் முகாமையாளர், ஷ்யாம் இம்பேட் வீதி பாதுகாப்பு உலக T20 தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான போட்டிகள் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் நடைபெறும் என உறுதி செய்திருந்தார்.
முதல் பருவகாலத்திற்கான வீதி பாதுகாப்பு உலக T20 தொடரில் இலங்கை லெஜன்ட்ஸ் அணியினை திலகரட்ன டில்ஷான வழிநடாத்தியிருந்ததோடு, சனத் ஜயசூரிய, ரங்கன ஹேரத், நுவான் குலசேகர, உபுல் சந்தன மற்றும் உபுல் தரங்க போன்ற முன்னணி வீரர்கள் இலங்கை லெஜன்ட்ஸ் அணிக்காக தமது திறமையினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<