விபத்தின் பின்னர் ரிஷாப் பாண்ட் வெளியிட்ட முதல் அறிக்கை

488

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்டவீரரான ரிஷாப் பாண்ட் தனக்கு ஏற்பட்ட கோர வாகன விபத்திற்கு பின்னர் முதல் தடவையாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.

தோல்வி குறித்து விளக்கம் கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

அந்தவகையில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைதள கணக்குகள் மூலமாக அறிக்கை வெளியிட்டிருக்கும் ரிஷாப் பாண்ட், தனக்கு இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஆதரவு வழங்கியவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்திருக்கின்றார்.

ரிஷாப் பாண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி தனது சொந்த ஊரான ரூர்கியிற்கு பயணித்த சந்தர்ப்பத்தில் கோரமான கார் விபத்து ஒன்றுக்கு உள்ளாகியதுடன் இந்த விபத்தினை அடுத்து அவரை சம்பவ இடத்தில் இருந்து ராஜாத் குமார் மற்றும் நிஷூ குமார் ஆகிய இருவர் பாதுகாப்பாக வைத்தியசாலையில் அனுமதித்தது அவரின் உயிரினை காப்பற்றுவதற்கு உதவியாக அமைந்திருந்தது.

அந்தவகையில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தன்னை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவியாக இருந்த இரண்டு பேருக்கும் எப்போதும் தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக ரிஷாப் பாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரிஷாப் பாண்ட் தனக்கு உதவியாக இருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதன் செயலாளர் ஜெய் சாஹ் மற்றும் தனது உடல்நலத்திற்காகப் பிரார்த்தனைகளை மேற்கொண்ட கிரிக்கெட் இரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்திருக்கின்றார்.

மறுமுனையில் தனக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ரிசாப் பாண்ட் விரைவில் பூரண குணமடைவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

தேசிய சுபர் லீக் 4 நாட்கள் போட்டிகளுக்கான குழாம்கள் அறிவிப்பு

இதேவேளை விபத்தில் இருந்து குணமடைந்து வருகின்ற ரிஷாப் பாண்ட் இந்த ஆண்டில் பெரும்பாலும் கிரிக்கெட் தொடர்கள் எதிலும் பங்கேற்கமாட்டார் என நம்பப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<