கோர விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிசாப் பாண்ட்

530

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான ரிசாப் பாண்ட் இன்று (30) காலை இடம்பெற்ற கோர கார் விபத்தில் சிக்கியிருப்பதோடு, விபத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முதன்முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாடவுள்ள வியாஸ்காந்த்!

”இந்திய கிரிக்கெட் வீரரான ரிசாப் பாண்டின் கார் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.” என உத்தர்காண்ட் பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரிகளில் ஒருவரான அஷோக் குமார் ரிசாப் பாண்டின் விபத்து குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

ரிசாப் பாண்ட் உத்தர்காண்டில் அமைந்திருக்கும் தனது சொந்த ஊரான ரூர்கியிற்கு பயணமாகிய சந்தர்ப்பத்திலேயே விபத்தில் சிக்கியிருப்பதாக கூறப்பட்டிருப்பதோடு அவர் நெற்றி மற்றும் முழங்கால் பிரதேசங்களில் காயங்களை எதிர் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரிசாப் பாண்டிற்கு உயிர் ஆபத்துக்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டிருக்கின்ற போதும் அவர் தொடர்பிலான மேலதிக மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனக் கூறப்பட்டிருக்கின்றது.

25 வயது நிரம்பிய பாண்ட் இலங்கை அணியுடன் இந்தியா விளையாடவுள்ள கிரிக்கெட் சுற்றுப் பயணங்களில் உள்ளடக்கப்படாத போதும், அதற்கு முன்னர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரினை இந்தியா 2-0 எனக் கைப்பற்றுவதற்கு தனது துடுப்பாட்டம் மூலமாக முக்கிய காரணமாக அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

சுபர் கிங்ஸ் அணியிலிருந்து விலகும் ஹெரி புரூக்!

அத்துடன் ரிசாப் பாண்டின் விபத்திற்காக கிரிக்கெட் வீரர்களும், இரசிகர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை  சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<