ரியோ ஒலிம்பிக் 2016 – ஆகஸ்ட் 20

453

மீண்டும் மீண்டும் போல்ட் சாதனை

ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 9 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு  தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ள உசேன் போல்ட், இன்று நடைபெறும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக, பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம்) இவர் வென்றிருந்தார். அந்த சாதனையை தொடரும் வகையில் ரியோ ஒலிம்பிக்கிலும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இவர் வாகை சூடுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நின்றது.

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெற்ற 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 37.27 வினாடிகளில் வெற்றிக் கோட்டை கடந்து இந்த ஒலிம்பிக்கின் மூன்றாவது தங்கத்தை இவர் தட்டிச் சென்றார். இதே தூரத்தை 37.60 வினாடிகளில் கடந்த ஜப்பான் வீரர் வெள்ளிப் பதக்கத்தையும், 37.62 வினாடிகளில் கடந்த அமெரிக்க வீரர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

இந்த வெற்றியுடன், தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள உசேன் போல்ட், இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த பின்லாந்து நாட்டின் ஓட்டப்பந்தய வீரர் பாவோ நுர்மி, அமெரிக்காவின் பிரபல ஓட்டப்பந்தய வீரரும், நீளம் தாண்டுதல் வீரருமான கார்ல் லிவீஸ் போன்ற பிரபல ஜாம்பவான்களின் தரவரிசையை மிக குறைந்த வயதிலும், குறுகிய காலகட்டத்திலும் எட்டிப்பிடித்து, அசுர சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஹமத் அலி மற்றும் பீலே வரிசையில் நானும் இருக்கிறேன்: உசைன் போல்ட்

உலகின் அதிகவேக ஓட்டப்பந்தய வீரராக ஜமைக்காவின் உசைன் போல்ட் திகழ்ந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு பீஜிங் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இருந்து இதுவரை அவரை 100 மீ, 200 மீ மற்றும் 4X100 மீட்டர் ஓட்டத்தில் வென்றது கிடையாது.

இந்த மூன்று பிரிவிலும் (100 மீ, 200 மீ மற்றும் 4X100 மீட்டர்) 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றார். அதன்பின் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றார். தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் 100 மீ மற்றும் 200 மீ பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். 4X100 மீட்டர் தூரம் மட்டுமே மீதமுள்ளது. இதிலும் தங்கம் வென்றுவிட வாய்ப்பு உள்ளது.

இதன்மூலம் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் மூன்று ஒலிம்பிக்கிலும் தங்க பதக்கம் வாங்கிய ஒரே வீரர் எனற சரித்திர சாதனை படைக்க இருக்கிறார்.

இவர், விளையாட்டில் வாழ்நாள் சாதனையாளராக விளங்கும் மொகமது அலி மற்றும் பீலே ஆகியோருடன் தன்னை சமநிலை வரிசையில் வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பீலே மற்றும் மொகமது அலி போன்ற மிகச்சிறந்த வீரர்களின் வரிசையில் இருக்கவேண்டும். பத்திரிகைகள் எப்படி எழுதுகின்றன என்பதை பார்க்க நாளை வரை (4X100 மீட்டர் போட்டி நடைபெறும் வரை) காத்திருக்கிறேன்.

இந்த ஒரு நிலைக்காக நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்துள்ளேன். விளையாட்டில் மிகவும் சிறந்த வீரர்களில் ஒருவர் நான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். என்னுடைய நோக்கமும் இதுதான் என்றார்.

லின் டானின் ஹாட்ரிக் கனவை தகர்த்தார் சோங் வெய்

ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் அரைஇறுதியில்நம்பர் ஒன்வீரர் மலேசியாவின் லீ சோங் வெய் 15-21, 21-11, 22-20 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் சீனாவின் லின் டானை சாய்த்தார். இதன் மூலம் 2008, 2012-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்த லின் டானின்ஹாட்ரிக்கனவு தகர்ந்தது.

மற்றொரு அரைஇறுதியில் உலக சாம்பியன் சீனாவின் சென் லாங் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்செனை தோற்கடித்து இறுதிசுற்றை எட்டினார்.