அவுஸ்திரேலிய மல்யுத்த வீரர் ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கம்

257
Australian wrestler Vinod Kumar

ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் ஆரம்பமாக இருக்கும்  ஒலிம்பிக் போட்டிக்கானஅவுஸ்திரேலிய மல்யுத்த அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத்குமார் (66 கிலோ) இடம் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அல்ஜீரியாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வினோத்குமார் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதனால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் அணியில் இருந்து வினோத்குமாரை நீக்கும்படி அவுஸ்திரேலிய  மல்யுத்த சம்மேளனத்துக்கு அந்த நாட்டு ஒலிம்பிக் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் வினோத்குமார் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வினோத்குமாரின் பயிற்சியாளர் கோஸ்ட்யா எர்மாகோவிச் கருத்து தெரிவிக்கையில், ‘வினோத்குமார் ஜெர்மனியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த தகவல் அறிந்ததுடன் அவர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார். அவர் எந்தவித தவறும் செய்யவில்லை என்பதில் முழு உறுதியுடன் இருக்கிறார். அவர் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்’ என்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்