பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பொண்டிங்

Indian Premier League

25

இந்திய பிரிமீயர் லீக் (IPL) T20 தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட ரிக்கி பொண்டிங் அந்த பொறுப்பில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அசலங்கவின் அபார ஆட்டத்துடன் பிளே-ஓஃப் முன்னேறியது ஜப்னா!

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து சுமார் 7 பருவங்களாக டெல்லி கெபிடல்ஸ் அணியை பயிற்சியாளராக வழிநடாத்திய பொண்டிங், தனது பயிற்சிக்காலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு டெல்லி அணியை அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் டெல்லி அணிக்கு கிடைத்த சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராகவும் பொண்டிங் காணப்படுகின்றார். 

அதேநேரம் பொண்டிங் குறித்து கருத்து வெளியிட்டுள்ள டெல்லி கெபிடல்ஸ் அணி நிர்வாகம், பொண்டிங் கடந்த காலத்தில் வழங்கிய சேவைகளுக்கு பாராட்டுக்களையும் தமது நன்றிகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றது. 

இதேநேரம் டெல்லி கெபிடல்ஸ் அணி மிக விரைவில் தமது அணிக்கான புதிய பயிற்சியாளர் குறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளுக்கு<<