பஞ்சாப் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பொண்டிங் நியமிக்கப்படுள்ளார்.
இதன்படி, 2025 முதல் 2028 வரையான நான்கு ஆண்டுகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ரிக்கி பொண்டிங், பின்னர் பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் பணியாற்றி வந்தார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றிய அவர், இறுதியாக டெல்லி கெபிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, 2018இல் டெல்லி கெபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ரிக்கி பொண்டிங் அந்த அணியை மூன்று தடவைகள் தொடர்ச்சியாக பிளே–ஆப் சுற்றுக்குத் தகுதி பெறச் செய்ததில் பெரும் பங்காற்றினார். இதில் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ட்ரிவர் பெய்லிஸ் செயல்பட்டார். அத்துடன், அந்த அணியின் கிரிக்கெட் மேம்பாட்டு தலைமைப் பொறுப்பில் முன்;னாள் இந்திய வீரர் சஞ்சய் பாங்கரும், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பந்துவீச்சாளர் லாங்கிவெல்ட்டும், சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக சுனில் ஜோஷியும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் இறுதியாக 2024 ஐபிஎல் சீசனில் படுமோசமாக ஆடிய அந்த அணி 9ஆவது இடத்தைப் பிடித்தது.
- ஐபிஎல் தொடரில் சங்கக்காரவுடன் கைகோர்க்கும் ராகுல் டிராவிட்
- ஐசிசியின் விருதினை வென்ற வெல்லாலகே, ஹர்சிதா!
- புதிய தலைவரினைப் பெறும் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி
இதுவரை நடைபெற்றுள்ள 17 ஐபிஎல் சீசன்களில் 2 தடவைகள் மாத்திரம் பிளே–ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற மோசமான செயல்பாடு கொண்ட ஒரு அணியாக பஞ்சாப் கிங்ஸ் விளங்குகிறது. குறிப்பாக, கடைசி பத்து வருடங்களில் ஒரு முறை கூட அந்த அணி பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இப்படியான நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் புதிய தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங்கை ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. எனவே, கடந்த ஏழு சீசன்களில் அந்த அணியின் ஆறாவது தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
பஞ்சாப் கிங்ஸ், தங்கள் எக்ஸ் பக்கத்தில் ரிக்கி பொண்டிங்கின் ‘ஸ்பிரிங் பேட்‘ தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது. 1990களில், அவர் துடுப்பெடுத்தாடிய போது, அவரது துடுப்பு மட்டையில் ஸ்பிரிங் இருப்பதாக வதந்திகள் இந்தியாவில் பரவியது காரணமாக இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய நியமனம் தொடர்பாக ரிக்கி பொண்டிங் கருத்து வெளிடுகையில்,’பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் வாய்ப்பை வழங்கியதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். இத்தனை ஆண்டுகளாக அணிக்கு உறுதுணையாக இருக்கும் ரசிகர்களுக்கு பரிசு வழங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. புதிய சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்‘ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் கிரிக்கெட் அபிவிருத்தி, சார்லஸ் லாங்வெல்ட் வேகப்பந்து வீச்சு துறை, சுனில் ஜோசி சுழல்பந்து வீச்சுப் பயிற்சியாளார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ளனர். தற்போது பஞ்சாப் அணியில் புதிய தலைவர் தேர்வு, அணியின் சிறந்த செயல்பாடு ஆகியவை ரிக்கி பொண்டிங் முக்கியமான பொறுப்பான உள்ளது.
எனவே, ஐபிஎல் போட்டிகள் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட சம்பியன் பட்டத்தை வெல்லாத பஞ்சாப் அணிக்கு ரிக்கி பொண்டிங்கின் வருகை உத்வேகமூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<