23 வயதின்கீழ் வளர்ந்துவருவோருக்கான கிரிக்கெட் தொடரில் முக்கிய மாற்றம்

551

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூர் கழகங்களுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்ட வளர்ந்துவரும் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது 

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

இரண்டு நாட்களைக் கொண்டதாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் 22 கழகங்கள் நான்கு பிரிவுகளின் கீழ் போட்டியிடவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நொக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும்

இப்போட்டித் தொடரின் குழு நிலைப் போட்டிகள் அனைத்தும் இரண்டு நாட்கள் கொண்டதாக நடைபெறவுள்ளதுடன், காலிறுதிச் சுற்று முதல் இறுதிப் போட்டி வரை நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளும் மூன்று நாட்களைக் கொண்டதாக நடைபெறவுள்ளமை இத்தொடரின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இம்முறை போட்டித் தொடரில் களமிறங்கவுள்ள அணிகளின் விபரம் 

குழு A குழு B குழு C குழு D 
எஸ்.எஸ்.சி சி.சி.சி செரசன்ஸ் முவர்ஸ்
ராகம என்.சி.சி பாணந்துறை இராணுவம்
பி.ஆர்.சி கோல்ட்ஸ் சிலாபம் மேரியன்ஸ் தமிழ் யூனியன்
காலி நீர்கொழும்பு விமானப்படை குருநாகல்
கடற்படை பதுரெலிய புளூம்பீல்ட் லங்கன்ஸ்
பொலிஸ் துறைமுக

அதிகார சபை

இவ்வருடத்தில் நடைபெறவுள்ள இலங்கையின் பிரதான முதல்தர லீக் போட்டிகள் (உள்ளூர் கழகங்களுக்கிடையிலான போட்டித் தொடர்) ஆரம்பமாவதற்கு முன் 23 வயதுக்குட்பட்ட வளர்ந்துவரும் வீரர்களுக்கிடையில் இந்தத் தொடர் நடத்தப்படுவது அவர்களுக்கு சிறந்ததொரு அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பங்களாதேஷ் செல்லும் இலங்கை வளர்ந்து வரும் அணி

தென்னாபிரிக்க மண்ணில் முக்கோண ஒருநாள் தொடரை கைப்பற்றி, டெஸ்ட் தொடரை இழந்த…

அதுமாத்திரமின்றி, பாடசாலை மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கும் இப்போட்டித் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதால் அவர்களுக்கும் தேசிய அணியில் இடம்பெறுவதற்கான அரிய வாய்ப்பாகவும் இது அமையவுள்ளது

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்காக கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட இப்போட்டித் தொடரில் 24 கழங்கள் பங்குபற்றியிருந்தன. 8 குழுக்களாக நடைபெற்ற குறித்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு கோல்ட்ஸ் கழகத்தை வீழ்த்திய எஸ்.எஸ்.சி கழகம் சம்பியனாகத் தெரிவாகியது

இதுஇவ்வாறிருக்க, கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் 23 வயதுக்குக்கு மேற்பட்ட 4 வீரர்களுக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், இம்முறை போட்டித் தொடரில் 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது

போட்டி அட்டவணை

Sep 7-8 Sep 11-12 Sep 15-16 Sep 19-20 Sep 23-24
SSC V Police Ragama V SSC SSC V Navy Galle V SSC SSC V BRC
Navy V Ragama Navy V BRC Ragama V Galle BRC V Ragama Ragama V Police
BRC V Galle Police V Galle BRC V Police Police V Navy Galle V Navy
CCC V Ports Authority CCC V NCC Baduraliya V CCC Negombo V CCC CCC V Colts
NCC V Baduraliya Baduraliya V Colts NCC V Negombo Colts V NCC NCC V Ports Authority
Colts V Negambo Ports Authority V Negambo Colts V Ports Authority Ports Authority V Baduralliya Negambo V Baduraliya
Saracens V Panadura Saracens V Chilaw Marians Saracens V Air Force Bloomfield V Saracens Panadura V Chilaw Marians
Chilaw Marians V Air Force Bloomfield V Panadura Chilaw Marians V Bloomfield Air Force V Panadura Air Force V Bloomfield
Moors V Army Tamil Union V Moors Kurunagala V Moors Moors V Lankans Army V Tamil Union
Tamil Union V Kurunagala Army V Lankans Lankans V Tamil Union Kurunagala V Army Lankans V Kurunagala

காலிறுதிப் போட்டிகள் – செப்டம்பர் 27-28-29

அரையிறுதிப் போட்டிகள் – ஒக்டோபர் 4-5-6

இறுதிப் போட்டி – ஒக்டோபர் 11-12-13

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<