நெதர்லாந்து கால்பந்து அணியின் தலைவரும் பயர்ன் முனிச் கால்பந்து கழகத்தின் சிரேஷ்ட வீரருமான ஆயன் ரொபென் (Arjen Robben) சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டியின் தோல்வியின் பின்னரே அவர் தனது ஓய்வை கால்பந்து உலகிற்கு அறிவித்துள்ளார்.
ஹட்ரிக் கோல் மூலம் ஆர்ஜன்டீனாவின் உலகக் கிண்ண கனவை நனவாக்கிய மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸியின் ஹட்ரிக் கோல் மூலம் தீர்க்கமான ஈக்வடோர் அணியுடனான போட்டியை 3-1 என்ற …
1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி பிறந்த அயர்ன் ரொபென் தனது சிறுபராயம் முதலே கால்பந்து துறையில் சிறந்த வீரராக திகழ்ந்தார் என்பதற்கு இவர் விளையாடிய முன்னணி கழகங்கள் சான்றாக அமைகின்றன.
இரண்டு கால்களாலும் முன்களத்தில் விளையாடும் திறமை படைத்த ரொபென், கால்பந்து பயணத்தை தனது சொந்த நாடான நெதர்லாந்திலுள்ள குரோனின்ஜன் கால்பந்து கழகத்துடன் (FC Groningen) இணைந்து ஆரம்பித்தார். குரோனின்ஜன் கழகத்துடன் இணைந்த முதல் வருடமே அக்கழகத்தின் சிறந்த கால்பந்து வீரர் என்ற பட்டத்தை வென்றார்.
அதனைத் தொரடர்ந்து PSV கழகத்துடன் இணைந்து செயற்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு செல்சி கால்பந்து கழகத்துடனும், அதனைத் தொடர்ந்து ரியல் மெட்ரிட் கழகத்துடனும் ஓப்பந்தம் செய்தார். அவ்வணிக்கு கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ககா (Kaka) ஆகியோரின் வருகையுடன் ரொபென் தனது பயணத்தை பயர்ன் முனிச் கழகத்துடன் இணைந்து தொடர்ந்து வருகிறார்.
கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற போர்த்துக்கல் அணியுடனான நட்புறவுப் போட்டியோன்றின் போதே ரொபென் நெதர்லாந்து அணிக்காக முதன்முதலாக விளையாடினார். தனது 19ஆம் வயதிலே நெதர்லாந்து கால்பந்து அணியுடன் இணைந்த ரொபென், இதுவரை 96 போட்டிகளில் விளையாடி தனது அணிக்காக 37 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அத்துடன் 2010ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிப் போட்டியில், நெதர்லாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான கோலை இவரே பெற்றார். எனினும் இறுதிப் போட்டியில் பலம்மிக்க ஸ்பெய்ன் அணியிடம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்று இரண்டாவது இடத்தை நெதர்லாந்து அணி பெற்றது.
இரண்டாவது பாதி கோல் மழையினால் சொலிட் அணிக்கு இலகு வெற்றி
டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் …
2010ஆம் ஆண்டிற்கான ”ஜேர்மனியின் கால்பந்து வீரர்” என்ற பட்டத்தையும் 2005ஆம் ஆண்டிற்கான் புராவோ (Bravo) பட்டத்தையும் வென்றுள்ள ஆயென் ரொபென் பலமுறை பேலுன் டோர் (Ballon d’or) பட்டம் மற்றும் புஸ்காஸ் (Puskas) பட்டம் என்பவற்றிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் (11) சுவீடன் அணியுடன் மோதிய போட்டியில் ரொபென், அணிக்காக இரு கோல்களை பெற்ற போதும் தனது அணியால் 2018ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட முடியாது என்று உறுதியானவுடனே தனது ஓய்வை குறித்த போட்டியின் முடிவில் அறிவித்தார்.
கால்பந்து ஜாம்பவானாக கருதப்படும் ஆயன் ரொபெனின் ஓய்வானது நெதர்லாந்து அணி ரசிகர்களுக்கு மட்டுமன்றி கால்பந்து ரசிகர்களுக்கும் பாரிய இழப்பாகவே அமைகின்றது.
அண்மையில் இங்கிலாந்தின் பிரபல வீரர் ரூனியும் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தமை நினைவு கூறத்தக்கது.