அகில தனன்ஜயவின் பந்துவீச்சு முறையில் சந்தேகம்

1093

காலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜயவின் பந்துவீச்சு முறை பற்றி சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் வெற்றியிட்டியது.

தற்போது 25 வயதான தனன்ஜயவின் பந்துவீச்சின் சட்டபூர்வ தன்மை குறித்து அவதானம் செலுத்தி போட்டி அதிகாரிகள் இலங்கை அணி முகாமையிடம் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர்.  

இலங்கை அணியின் ஆட்டத்தை விமர்சித்த சந்திக ஹதுருசிங்க

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட்…….

தற்போது தனன்ஜய பந்துவீசும் முறை, விதியை மீறும் பந்துவீச்சு முறை பற்றிய .சி.சியின் மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது பந்து வீச்சு முறை பற்றி கூறப்பட்ட முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் அடுத்த 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சு முறை பற்றி சோதனைக்கு முகம்கொடுக்கவுள்ளார். எனினும், அந்த சோதனை முடிவுகள் வரும் வரை அவரால் சர்வதேச போட்டிகளில் பந்துவீச அனுமதி உள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 14ஆம் திகதி (புதன்கிழமை) பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<