சிவப்பு அட்டையினை வழங்குவதற்கு மறந்த கால்பந்து நடுவர்

301

இரண்டு மஞ்சள் அட்டைகளுக்குப் பின்னர், கால்பந்து நடுவரான இர்ஷாட் பாறூக் சிவப்பு அட்டையினை வழங்கத் தவறி, பின்னர் தனது தவறினை உணர்ந்து கொண்ட சம்பவம் அனைவரினையும் வியப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றது. 

கொழும்பு FC யை வீழ்த்திய சீ ஹோக்ஸ்; டிபெண்டர்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி

ப்ளூ ஈகிள்ஸ் மற்றும் நியூ யங்ஸ் அணிகள் இடையிலான 2021ஆம் ஆண்டுக்கான சுபர் லீக் கால்பந்து தொடரின் முன்பருவகாலப் போட்டி ஒன்றிலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருந்ததோடு, அது 2006ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் கால்பந்து நடுவர் கிரஹம் போல், மூன்று தடவைகள் க்ரோசியா நாட்டு அணியின் ஜோசிப் சிமுனிக்கிற்கு எச்சரிக்கை வழங்கிய சம்பவத்தினையும் நினைவூட்டியிருந்தது. 

இந்த சம்பவத்தில் இரண்டாவது தடவை மஞ்சள் அட்டை பெற்ற பின்னரும், அதற்காக சிவப்பு அட்டை பெறுவதற்கு தாமதமான வீரர்களில் ஒருவராக ப்ளூ ஈகிள்ஸ் அணியின் நெத்ம மல்ஷான் மாற, இதற்கு முன்னர் ப்ளூ ஈகள்ஸ் அணியின் ஏனைய வீரர்களில் ஒருவரான அமித் குமாராவிற்கும் இர்ஷாட் பாறூக் இரண்டு மஞ்சள் அட்டைகளின் பின்னர் சிவப்பு அட்டை வழங்குவதற்கு தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், குறித்த போட்டியின் உதவி நடுவராக இருந்த இரான் உதயங்கரவின் உதவியின் மூலமே, இர்ஷாட் பாறூக் மேற்கொண்ட தவறுகள் போட்டியின் நடுவே சுட்டிக்காட்டப்பட்டிருந்ததோடு, தவறு சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு நெத்ம மல்ஷான் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். இதனால், ப்ளூ ஈகிள்ஸ் அணியின் வீரர்கள் 10 ஆக குறைக்கப்பட்டிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. 

Video – மீண்டும் பார்சிலோனாவுக்கு தலைவரானார் JOAN LAPORTA ! | FOOTBALL ULAGAM

மறுமுனையில், இலங்கையின் முன்னணி கால்பந்து நடுவர்களில் ஒருவராக இருக்கும் இர்ஷாட் பறூக் மேற்கொண்ட தவறுகள், ஊடகங்களுக்கு இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட போட்டி அறிக்கையில் முழுமையாக சுட்டிக்காட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உதவி நடுவர்களுடன் சரியான தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்படும் போது இவ்வாறான தவறுகள் இடம்பெறுவதனை தவிர்க்க முடியும் என்பதோடு, இலங்கையின் கால்பந்து விளையாட்டும் அடுத்த கட்டத்திற்குச் சென்று வரும் இந்த தருணத்தில் இலங்கையின் கால்பந்து சம்மேளனம் நடுவர்கள் மீது அக்கறை செலுத்தி இவ்வாறான தவறுகளை குறைக்க முற்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் காணப்படுகின்றது. 

அதேவேளை, இர்ஷாட் பாறூக் மேற்கொண்ட தவறுகள் தொடர்பில் இலங்கையின் கால்பந்து சம்மேளனம் இதுவரை எந்தவொரு அறிக்கையினையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<