முன்னணி பந்துவீச்சாளரை இழக்கும் இங்கிலாந்து

ICC Cricket World Cup 2023

806

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரீஸ் டொப்லே உலகக்கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீஸ் டொப்லே தென்னாபிரிக்க அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போட்டியின் போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார்.

>> மீண்டும் உபாதைச் சிக்கலில் இலங்கை அணி

இவருடைய பந்துவீச்சின் போது பந்து ஒன்றை தடுக்க முற்பட்ட போது ரீஸ் டொப்லேவின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக பாதியில் மைதனாத்தைவிட்டு வெளியேறினார்.

போட்டியின் பிற்பகுதியில் காயத்துடன் பந்துவீசியி ரீஸ் டொப்லே 2 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், மொத்தமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனினும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 229 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் ரீஸ் டொப்லேவின் உபாதை உறுதிசெய்யப்பட்டதுடன், அவர் உலகக்கிண்ணத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்தது.

ரீஸ் டொப்லேவுக்கு பதிலாக ஜொப்ரா ஆர்ச்சர் இணைக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகிய போதும், அவர் அணியில் இணைக்கப்படமாட்டார் என அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார். எனவே மாற்று வீரரை இங்கிலாந்து கிரிக்கெட் சபை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<