Red Bull Half Court சுற்றுத்தொடருக்கு எகிப்து செல்லும் இலங்கை வீர, வீராங்கனைகள்

246
Red Bull Half Court

இலங்கை கூடைப்பந்து சம்மேளன மைதானத்தில் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி Red Bull Half Court சுற்றுத்தொடரானது மாகாண அணிகளின் பங்கெடுப்போடு நிறைவடைந்திருக்கின்றது.

>> WATCH – புதிய சாதனையை படைத்த REAL MADRID இன் முகாமையாளர் | FOOTBALL ULAGAM

முதன்முறையாக இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்ட Red Bull Half Court போட்டித்தொடரானது ஒரு அணியில் மூன்று பேர் பங்குபெறுகின்ற (3X3) கூடைப்பந்து சுற்றுத்தொடராகும்.

இந்த கூடைப்பந்து சுற்றுத்தொடரில் பிராந்திய அடிப்படையில் தகுதி பெற்ற தென், மத்திய, மேல் மற்றும் வட மாகாணங்களைச் சேர்ந்த மொத்தம் 8 அணிகள் (4 ஆடவர் அணிகள், 4 மகளிர் அணிகள்) பங்கெடுத்திருந்தன.

இந்த Red Bull Half Court சுற்றுத்தொடர் 20 நாடுகளில் 15,000 வீர, வீராங்கனைகள் மத்தியில் சிறந்த “streetballers” இணை தெரிவு செய்வதற்காக நடாத்தப்படுகின்றது.

இந்த Red Bull Half Court கூடைப்பந்து சுற்றுத்தொடரில், போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்யாத போதும் அதிக புள்ளிகளைப் பெறும் சந்தர்ப்பத்தில், இந்த தொடரில் பங்கெடுக்கும் அணிகளுக்கு “own the court” முறை மூலம் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

வர்த்தக நாமம் என்கிற அடிப்படையில் இந்த சுற்றுத்தொடர் மூலம் விளையாட்டின் ஊடாக இளைஞர்களுக்கு சிறகுகளை வழங்க எதிர்பார்க்கும் Red Bull நிறுவனமானது, உள்நாட்டு கூடைப்பந்து திறமைகளை அடையாளம்

காணும் நோக்கில் இந்த தொடரினை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்வதற்கு தீர்மானித்திருக்கின்றது.

>> 2022 ஆசிய விளையாட்டு விழா திடீர் ஒத்திவைப்பு

அதேநேரம் இந்த சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கான அணிகளை தெரிவு செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட பிராந்தியரீதியிலான மோதல்களில் 400 இற்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கெடுத்திருந்ததோடு, ஆடவர் பிரிவின் சம்பியன் பட்டத்தினை எயார் பிரதர்ஸ் அணியும், மகளிர் பிரிவின் சம்பியன் பட்டத்தினை கொழும்பினைச் சேர்ந்த TBS அணியும் பெற்றுக் கொண்டன.

இதேநேரம் Red Bull Half Court சம்பியன்ஷிப் பட்டத்தினை வென்ற ஆடவர், மகளிர் அணிகள் எகிப்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதிப்படுத்தவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் விளையாட்டுச் செய்திகளுக்கு <<