ரெட்புல்லின் அனுசரணையில் சர்வதேசத்தின் எட்டு சிறந்த பல்கலைக்கழக அணிகள் மோதவுள்ள ஆறாவது ரெட்புல் பல்கலைக்கழக உலகத் தொடரின் (T20) இறுதிக்கட்ட போட்டிகள் செப்டம்பர் 23ம் திகதி தொடக்கம் 29ம் திகதிவரை கொழும்பு எஸ்.எஸ்.சி. (SSC) மற்றும் என்.சி.சி (NCC) மைதானங்களில் நடைபெறவுள்ளன.
மன்னிப்புக் கேட்டார் மெதிவ்ஸ்
ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்வி முழு அணிக்கும் …
இம்முறை நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில் இலங்கை உள்ளிட்ட இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் நாடுகளைச் சேர்ந்த ஆறு அணிகள் இறுதிக்கட்ட போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளன. முக்கியமாக இந்த அனைத்து அணிகளும் தங்களுடைய நாடுகளில் நடைபெற்ற உள்ளூர் பல்கலைக்கழக அணிகளுக்கான தொடரில் வெற்றிபெற்று, ரெட்புல் பல்கலைக்கழக உலகத் தொடரில் இணைந்துள்ளன.
குறித்த இந்த தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் வணிக முகாமைத்துவ கல்லூரி அணி (BMC) விளையாடுகின்றது. இந்த அணி 2016ம் ஆண்டு ரெட்புல் பல்கலைக்கழக உலகத் தொடரின் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியதுடன், கடந்த வருடம் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. அத்துடன் இம்முறையும் கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இம்முறை நடைபெறவுள்ள போட்டிகளின் அடிப்படையில் அதிக வெற்றிகளை குவிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். இதனையடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்கும்.
சூடு பிடித்துள்ள மொயின் அலியின் ஒசாமா விவகாரம்
அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் தன்னை ஒசாமா …
இதற்கு முன்னர் நடைபெற்ற ஐந்து வருடங்களில் தென்னாபிரிக்கா மூன்று தடவைகள் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியதுடன், இலங்கை மற்றும் இந்திய அணிகள் தலா ஒவ்வொரு தடவை வெற்றிவாகையை சூடியுள்ளன.
இதேவேளை, ரெட்புல் பல்கலைக்கழக உலகத் தொடரின் பணி்ப்பாளராக நியமி்க்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ப்ரெண்டன் குருப்பு, இம்முறை நடைபெறவுள்ள போட்டித் தொடர் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தினார். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டதாவது,
“ரெட்புல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. அதிலும் இம்முறை போட்டித் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. சர்வதேசத்தில் உள்ள இளம் வீரர்களுக்கு உயர்தர அனுபவத்தை பெற்றுத்தரவும், அவர்களின் விளையாட்டை மேம்படுத்திக்கொள்ளவும் இதுவொரு சிறந்த வாய்ப்பு.
அத்துடன், இலங்கையில் உள்ள இளம் வீரர்களுக்கு இதுவொரு மிகப்பெரிய வாய்ப்பு. சரியான வாய்ப்புகள் வழங்கப்படாததன் காரணத்தினாலேயே தேசிய மட்டத்தில் வீரர்கள் பிரகாசிக்கத் தவறுகின்றனர். அவர்களது ஆட்டத்தில் மாற்றங்களை செய்துக்கொள்வதிலும், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் விளையாடுவதற்கும் ரெட்புல் பல்கலைக்கழக கிரிக்கெட் பெரிதும் உதவக்கூடியது” என்றார்.
இதேவேளை ரெட்புல் பல்கலைக்கழக உலகத் தொடரின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரொஷான் மஹனாம கருத்து வெளியிடுகையில்,
“இளம் வயதுடைய கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதும், அவர்களை சிறந்த வழிக்கு கொண்டு செல்வதும் எமது தலயாய கடமையாகும். இவ்வாறு கிரிக்கெட் விளையாடுவதற்கு பிள்ளைகள் விரும்பும் போது பெற்றோர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இளம் வயதில் உள்ள வீரர்கள் கிரிக்கெட்டை விட்டுவிட்டு, வேறு தொழில்களை நாடுவதால், நாடு திறமையான வீரர்களை இழக்க நேரிடுகிறது.
இதனை நிவர்த்தி செய்யும் நோக்குடன் ரெட்புல் பல்கலைக்கழக கிரிக்கெட் தொடர் வீரர்களின் கல்வியை முன்னெடுக்கவும், அதனுடன் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கும் மிகப்பெரிய அளவில் உதவுகின்றது” என்றார்.
ரெட்புல் பல்கலைக்கழக உலகத் தொடரை பொருத்தவரையில் ஏனைய கிரிக்கெட் போட்டிகளை விட சற்று வித்தியாசமான விதிமுறைகளும் கையாளப்படுகின்றன. அதுதான் எனர்ஜைசர் (Energizer)ஓவர் முறைமை. குறிப்பிட்ட அந்த ஓவரில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு ஓட்டங்கள் இரட்டிப்பாக வழங்கப்படும். அதேபோன்று குறித்த ஓவரில் விக்கெட் இழக்கப்படுமாயின் துடுப்பெடுத்தாடும் அணியின் ஓட்ட எண்ணிக்கையில் ஐந்து ஓட்டங்கள் குறைக்கப்படும். இவ்வாறு விறுவிறுப்பாக நடைபெறப் போகும் இந்த போட்டித் தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…