UEFA சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி நேற்று இரவு இத்தாலி நாட்டின் மிலென் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ரியல் மெட்ரிட் மற்றும் எட்லிடிகோ மெட்ரிட் ஆகிய கழகங்கள் மோதின.
இறுதிப் போட்டி என்பதால் இரு அணிகளும் தமது முழு முயற்சியில் கோல்களைப் போடும் நோக்கில் விளையாடின. அந்த முயற்சியின் பலனாக முதல்பாதியின் 15ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் கழக வீரர் செர்ஜியோ ரமோஸால் முதலாவது கோல் போடப்பட்டது. இதன் பின் எட்லிடிகோ மெட்ரிட் கழகம் அவதானமாக விளையாடியது. முதல்பாதி முடிவில் ரியல் மெட்ரிட் 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுக்காணப்பட்டது.
காலிறுதியில் ப்ளூ ஸ்டாரை வீழ்த்தியது சவுண்டர்ஸ்
பின் இரண்டாவது பாதி ஆரம்பமானது. இரண்டாவது பாதியின் ஆரம்பம் முதல் எட்லிடிகோ மெட்ரிட் கழகம் ஒரு கோலைப் போட்டு போட்டியை சமநிலை படுத்தும் முயற்சியில் விளையாடியது. மறுபுறம் ரியல் மெட்ரிட் கழகம் இன்னுமொரு கோலைப் போட்டு போட்டியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் முயற்சியில் விளையாடியது. ஆனால் இந்த இரண்டு அணிகளின் கோல்போடும் முயற்சியில் எட்லிடிகோ மெட்ரிட் கழகத்திற்கு மட்டும் ஒரு கோல் கிடைத்தது. யனிக் பெரீரா கரஸ்கோ என்ற வீரரால் போட்டியின் 79ஆவது நிமிடத்தில் எட்லிடிகோ மெட்ரிட் கழகத்தின் முதலாவது கோல் போடப்பட்டது. இதனால் போட்டியின் முழுநேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல்களைப் போட்டு போட்டி சமநிலையில் காணப்பட்டது.
பின் போட்டியின் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி முறை கையாளப்பட்டது. அந்த அடிப்படையில் பெனால்டி முறையில் 5-3 என்ற ரீதியில் ரியல் மெட்ரிட் கழகம் போட்டியை வெற்றி கொண்டு UEFA சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை சுவீகரித்தது. இந்தப் போட்டியின் வெற்றி பெனால்டி கோலை போர்த்துகல் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் போடப்பட்டமை சுவர்ஷயமான அம்சமாகக் காணப்பட்டது. அது மட்டுமில்லாமல் ரியல் மெட்ரிட் கழகம் UEFA சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற 11ஆவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்