ஆப்கானிஸ்தான் அணியினை த்ரில்லரான முறையில் தோற்கடித்திருக்கும் இலங்கை அணி, இம்முறைக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது.
இலங்கையின் வெற்றிக்கு வேகப் பந்துவீச்சாளர்களே காரணம் ஹத்துருசிங்க
ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற…
உலகக் கிண்ணத்தொடரின் 7ஆவது லீக் போட்டியாக அமைந்த இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான மோதல் நேற்று (4) கார்டிப் மைதானத்தில் ஆரம்பமாகியது.
மழையின் இடையூறு காணப்பட்டிருந்த இப்போட்டி அணிக்கு 41 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 201 ஓட்டங்களை குவித்தது. பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, 152 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து டக்வெத் லூயிஸ் முறையில் 34 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியே வெற்றி பெறும் என பரவலான கிரிக்கெட் இரசிகர்கள் நினைத்த போதிலும் இலங்கை அணிக்கு த்ரில் வெற்றி ஒன்று கிடைத்து. இலங்கை அணியின் இந்த வெற்றியினை போற்றும் விதமாக சமூக வலைதளம் டிவிட்டரில் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை சுவைத்தது இலங்கை
கார்டிப் – ஷோபியா கார்டன் மைதானத்தில்…
இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்த்தன, இலங்கை அணியின் வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்ததோடு, இலங்கை அணியிடம் அழுத்தங்களின் போதும் திறமையாக செயற்படும் தன்மை உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதேநேரம் மஹேல, இலங்கை அணியில் இன்னும் முன்னேற்ற வேண்டிய விடயங்கள் சில இருக்கின்றது எனவும் சுட்டிக் காட்டியிருந்தார்.
Well done boys!!! room for improvment but showed under presure that we do have quality. Bowling unit was excellent and Nuwan pradeep was outstanding today..? points on the board ?
— Mahela Jayawardena (@MahelaJay) 4 June 2019
ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, குசல் பெரேராவின் சிறந்த ஆட்டம் காரணமாக மிகச் சிறந்த ஆரம்பத்தை காட்டிய போதிலும் பின்னர் தடுமாறியிருந்தது. இப்படியான துடுப்பாட்ட தடுமாற்றங்கள் உலகக் கிண்ணத்தில் எதிர்வரும் போட்டிகளில் மாற வேண்டும் என்பதே மஹேலவின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இலங்கை அணியின் வெற்றிக்கு வலதுகை வேகப் பந்துவீச்சாளரான நுவான் பிரதீப்பின் பங்களிப்பு முக்கிய காரணமாக இருந்தது. நுவான் பிரதீப் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 31 ஓட்டங்களை விட்டுத்தந்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருந்தார்.
ரோய், ஆர்ச்சர் மற்றும் சர்பராஸிற்கு ஐசிசி அபராதம்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான்…
நுவான் பிரதீப்பின் பந்துவீச்சினை இலங்கை அணியின் ஏனைய பந்துவீச்சாளர்களில் ஒருவரான தம்மிக்க பிரசாத் பாராட்டியிருந்ததோடு, இலங்கை அணி மீது எப்போதும் நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
Congratulations boys. Always have a faith on u all. Great game. Very wel bowled by nuwan Pradeep, mali and others. Great team effort boys. ?????@OfficialSLC @IamDimuth @Angelo69Mathews @KusalMendis1 @PereraThisara wel batted@KusalJPerera8 @IAmIsuru17
— Dhammika Prasad (@imDhammika) 4 June 2019
இதேநேரம் இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரும் இப்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர்களில் ஒருவரான ரசல் அர்னோல்ட் அணியின் வெற்றியினை சந்தோசத்திற்கு உபயோகம் செய்யும் ஒரு வார்த்தையுடன் கொண்டாடியிருந்தார்.
— Russel Arnold (@RusselArnold69) 4 June 2019
பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சல்மான் பட்டும் இலங்கை அணியின் வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்ததோடு, இந்தியாவின் கிரிக்கெட் ஆய்வாளர் ஹார்ஷா போக்லேவும் தனது வாழ்த்துக்களை குறிப்பிட்டிருந்தார்.
Great win @OfficialSLC .
— Salman Butt (@im_SalmanButt) 4 June 2019
Well……Oh Afghanistan! Much needed cheer for Sri Lanka. Hope they remain strong at #CWC2019 https://t.co/vdk5AOFVuj
— Harsha Bhogle (@bhogleharsha) 4 June 2019
ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியினை அடுத்து, இலங்கை அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் பாகிஸ்தான் அணியினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) பிரிஸ்டல் நகர மைதானத்தில் வைத்து சந்திக்கின்றது.
>>மேலும் மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<