ஐ.பி.எல். தொடரில் இம்முறை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும், வேகப்பந்து வீச்சாளர் நவ்டீப் சைனி நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
“நோ போல்” சர்ச்சையுடன் மும்பை அணிக்கு முதல் வெற்றி
ஐ.பி.எல். தொடரில் நேற்று (28) பெங்களூரில் நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு….
பெங்களூர் அணிக்காக கடந்த 2018ம் ஆண்டு 3 கோடி ரூபாவிற்கு வாங்கப்பட்டிருந்த நவ்டீப் சைனி, கடந்த சீசனில் ஒரு போட்டியிலும் விளையாடியிருக்கவில்லை. இந்த நிலையில் இம்முறை பெங்களூர் அணியில் இணைந்த இவருக்கு சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
குறித்த போட்டியில் விக்கெட்டுகளை கைப்பற்றாவிட்டாலும், எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் நவ்டீப் சைனி பந்து வீசியிருந்தார். இவ்வாறு, சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிட்டியது.
இந்தப் போட்டியில் பெங்களூர் பந்து வீச்சை மொஹமட் சிராஜுடன் ஆரம்பித்த நவ்டீப் சைனி தனது வேகத்தின் மூலமாக எதிரணியின் பந்து வீச்சாளர்களை தடுமாறச் செய்திருந்தார். நவ்டீப் சைனி விக்கெட்டுகளை வீழ்த்தாவிடினும், இவரது பந்துவீச்சின் வேகம் மணித்தியாலத்துக்கு 150 (149.63) கிலோ மீற்றரை நெருங்கியிருந்தது. அதேநேரம், இவர் வீசிய அதிகமான பந்துகள் மணித்தியாலத்துக்கு 140 கிலோமீற்றர் வேகத்துக்கும் அதிகமாக இருந்தமை இவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
அத்துடன், இம்முறை ஐ.பி.எல். போட்டிகளில் வேகமாக பந்து வீசியவர்கள் பட்டியலில், லொக்கி பேர்கஸன், காகிஸோ ரபாடா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய முன்னணி வீரர்களுக்கு மத்தியில் தனது பெயரையும், நவ்டீப் சைனி பதிவுசெய்துள்ளார். இவ்வாறு, வேகப்பந்து வீச்சால் சைனி ஒருபக்கம் இரசிகர்களின் கவனத்தை ஈர்க்க, மறுபக்கம் கொல்கத்தா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ப்ரசித் கிரிஷ்னா மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.
கொல்கத்தா அணியில் கடந்த பருவாகாலத்தில் இணைந்த ப்ரசித் கிரிஷ்னா, இம்முறை அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வருகின்றார். இவரின் வேகமும் மணித்தியாலத்துக்கு 150 கிலோ மீற்றரை நெருங்கியுள்ளது. இவர், 149.29 என்ற வேகத்தில் பந்துகளை வீசும் திறமையை கொண்டுள்ளார். இவ்வாறு, தங்களுடைய வேகத்தின் மூலம், இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இவர்கள், இந்திய கிரிக்கெட் சபையின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
Video – உலகக்கிண்ணம் நெருங்கும் நிலையில் மாலிங்க ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது சரியா? தவறா? – Cricket Kalam 10
தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தை…
இதேவேளை, இம்முறை ஐ.பி.எல். தொடரில் இதுவரை வேகமாக பந்து வீசியவர்கள் பட்டியலின் முதலிடத்தை கொல்கத்தா அணியில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி வீரர், லொக்கி பேர்கஸன் பிடித்துள்ளார். இவர், 151.69 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசியுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் காகிஸோ ரபாடா இரண்டாவது (150.99) இடத்தையும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரிட் பும்ரா மூன்றாவது (150.41) இடத்தையும் பிடித்துள்ளார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க