இந்திய அணியிலிருந்து வெளியேறும் அனுபவ வீரர்!

Asia Cup 2022

331

ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழாத்திலிருந்து ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ரவீந்திர ஜடேஜாவின் வலது முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவரால் போட்டிகளில் விளையாட முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்

ஜடேஜா தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் வைத்திய குழாத்தின் கண்கானிப்பில் இருப்பதுடன், ஜடேஜாவுக்கு பதிலாக மற்றுமொரு சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான அக்ஷர் பட்டேல் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.

ரவீந்திர ஜடேஜாவின் உபாதை தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இறுதியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் உபாதை காரணமாக ஜடேஜா விளையாடவில்லை. அதன்போது ஏற்பட்டிருந்த வலது முழங்கால் உபாதை மீண்டும் தொடர்வதாக இந்திய வைத்தியக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்ஷர் பட்டேல் ஏற்கனவே மேலதிக வீரராக பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர் அணியுடன் புறப்பட்டிருக்கவில்லை. இந்தநிலையில், இன்றைய தினம் அவர் டுபாய் நோக்கி புறப்படுவார் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய அணியானது முதல் சுற்றில் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இதில் வெள்ளிக்கிழமை (02) நடைபெறும் ஹொங் கொங் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இந்தியா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<