இந்திய கிரிக்கெட் அணியின் மற்றுமொரு நட்சத்திரம் ஓய்வு

30

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா T20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

LPL தொடரை ஆரம்பித்து வைக்கவுள்ள சமரி அதபத்து!

அந்தவகையில் 35 வயது நிரம்பிய ரவீந்திர ஜடேஜா இந்திய அணி T20 உலகக் கிண்ணத் தொடரினை வென்ற பின்னர் ஓய்வினை அறிவித்த மூன்றாவது இந்திய அணியின் சிரேஷ்ட வீரராக மாறியிருக்கின்றார் 

ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹிட் சர்மா ஆகியோர் T20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

நான் முழு மனதுடன் T20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவிக்கின்றேன்.” என தனது இன்டாஸ்கிராம் கணக்கு வாயிலாக தான் T20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதனை உறுதிப்படுத்தியிருந்தார் 

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையுடன் T20 அறிமுகம் பெற்ற ரவீந்திர ஜடேஜா இதுவரை 74 போட்டிகளில் ஆடியுள்ளதோடு 515 ஓட்டங்களையும், 54 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

I>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<