ICC யின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரரானார் அஷ்வின்

249

ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வினும், அதி சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்தின் டெமி போமன்ட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களை மாதந்தோறும் தேர்வு செய்து ஐசிசி கௌரவித்து வருகிறது

பெப்ரவரி மாத சிறந்த வீரர் விருதுக்கு மூவர் பரிந்துரை

இதன்படி, கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் இளம் வீரர் ரிஷாப் பண்ட் வென்றிருந்தார். இந்நிலையில் பெப்ரவரி மாதத்திற்கான விருதை பெறும் வீரரின் பெயர் நேற்று (09) அறிவிக்கப்பட்டது

இந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட், இந்திய அணியின் ஷ்வின், மேற்கிந்திய தீவுகள் அணியின் கைல் மேயர்ஸ் ஆகிய வீரர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது

இந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இந்திய சுழல் பந்துவீச்சாளரான ஷ்வின், ஐசிசியின் பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராகச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஷ்வின் அபாரமாக விளையாடினார்

இதில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அஷ்வின் 9 விக்கெட்டுக்களையும், 40 ஓட்டங்களையும் அடித்திருந்தார். இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுக்களுடன் 119 ஓட்டங்களையும், மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுக்களையும் எடுத்தார். நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் 8 விக்கெட்டுக்களை எடுத்ததுடன்  தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.  

IPL தொடரின் போட்டி அட்டவணை வெளியானது!

எதுஎவ்வாறாயினும், அஷ்வின் பெப்ரவரியில் நடைபெற்ற 3 போட்டியில் 24 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன், 176 ஓட்டங்களையும் குவித்தார். அதில் சென்னையில் விளையாடிய முக்கியமான போட்டியில் சதம் விளாசினார். அத்துடன், இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின்போது தனது டெஸ்ட் வாழ்க்கையில் 400 விக்கெட்டுக்கள் என்ற சாதனையையும் அவர் எட்டினார். 

இதன் அடிப்படையில் ஷ்வின் இவ்விருதுக்கு உரித்தானதுடன் அவருக்கு இரசிகர்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்

இதேவேளை, மகளிர் பிரிவில் இங்கிலாந்தின் டெமி போமன்ட் மாதத்தின் அதிசிறந்ந வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இவர் நியூஸிலாந்துக்கு எதிராக பெப்ரவரி மாதம் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 231 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்த ஆற்றல்கள் அவருக்கு ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான அதி சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றுக்கொடுத்துள்ளது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<