மீண்டும் இந்திய அணியில் அஸ்வின்; அணிக்கு புதிய தலைவர்

Australia tour of India 2023

244

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய குழாத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைக்கப்பட்டுள்ளார்.  

அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குழாத்தில் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே, நீண்ட காலமாக கேள்விக்குறியாகியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆசியக்கிண்ணத் தொடரின் சிறந்த பதினொருவர்!

ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடியிருந்த ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு முதல் போட்டியிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், கே.எல்.ராஹுல் அணித்தலைவராக செயற்படவுள்ளார். 

எனினும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாறவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான முழு பலத்துடைய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரவிச்சந்திரன் அஸ்வின் இறுதியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்ததுடன், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேநேரேம் வொசிங்டன் சுந்தர், ருதுராஜ் கைக்வாட் ஆகியோரும் ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். 

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 22ஆம், 24ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதல் 2 போட்டிகளுக்கான இந்திய குழாம் 

கே.எல்.ராஹுல் (தலைவர்), சுப்மன் கில், ருதுராஜ் கைக்வாட், சிரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் சமி, திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஸ்வின், வொசிங்டன் சுந்தர்  

மூன்றாவது போட்டிக்கான இந்திய குழாம் 

ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மான் கில், சிரேயாஸ் ஐயர், கே.எல்.ராஹுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் சமி, ஹர்திக் பாண்டியா, விராட் கோஹ்லி, குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், வொசிங்டன் சுந்தர் 

>>  மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<