இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதில் இருந்து இறுதியாக 21பேர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களிடம் கங்குலி தலைமையிலான ஆலோசனைக்குழு (கங்குலி, சச்சின், லஷ்மண்) நேர்காணல் நடத்தியது. நேற்று முன்தினமும் நேற்றும் கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோரிடம் இறுதிக்கட்ட நேர்காணல் நடத்தியது.
பின்னர், யாரைத் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற பரிந்துரையை பி.சி.சி.ஐ.க்கு அனுப்பிவைத்தது. இதன் அடிப்படையில் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தெரிவு செய்யப்பட்டுளளதாக அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குனர் ரவிசாஸ்திரி தனக்கு பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த ரவிசாஸ்திரி ஆலோசனை கமிட்டியில் உள்ள கங்குலி மீது அதிருப்தி தெரிவித்தார். இதற்கு கங்குலி பதிலடியும் கொடுத்தார்.
இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கிரிக்கெட் கமிட்டியில் உறுப்பினராக உள்ள ரவிசாஸ்திரி அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அத்தோடு இந்திய கிரிக்கெட் சபைக்கு ஆலோசனை வழங்கும் கமிட்டியில் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லஷ்மணன் உள்ளார். அவர் டென்விக் ஸ்போர்ட்ஸ் நிறுவன பங்குகளை வாங்கி இருந்ததால் இரட்டை ஆதாயப் பதவி குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்குப் பதிலளித்துள்ள கிரிக்கெட் சபை, லஷ்மணன் டென்விக் நிறுவன பங்குகளை கடந்த மார்ச் மாதம் முழுவதுமாக விற்றுவிட்டார். அவர் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது என்று கூறியுள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்