சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ரவிச்சந்திரன் அஸ்வின்

111

இந்திய அணியின் முன்னணி சுழல் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

லங்கா T10 சுப்பர் லீக் பிளே ஒப் சுற்றில் ஆடும் அனைத்து அணிகளும் உறுதி

இந்தியஅவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி மோசமான காலநிலை காரணமாக வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்து ஜந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை அடைந்த நிலையில் அஸ்வினின் தீடிர் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. 

அஸ்வினின் ஓய்வு தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.) தனது X சமூக வலைதள கணக்கு ஊடாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. 

அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகமாகியிருந்தார். அவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 T20I போட்டிகளில் ஆடி உள்ளதோடு, மொத்தமாக இந்திய அணிக்காக 765 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் அஸ்வினின் தீடிர் ஓய்வு அறிவிப்பானது கிரிக்கெட் இரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<