ஆப்கான் அணியின் நட்சத்திர சுழல்வீரரான ரஷீட் கான் இந்தப் பருவத்திற்கான இங்கிலாந்தின் “த ஹன்ரட்” தொடரிலிருந்து வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது.
>>மீண்டும் ஸ்டோக்ஸ் செய்தி அனுப்பினால் அழித்து விடுவேன் – மொயின் அலி
ரஷீட் கான் இந்த பருவத்திற்கான ஹன்ரட் தொடரில் ட்ரென்ட் ரொக்கேட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
எனினும் தற்போது அவருக்கு ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக அவரினால் இம்முறை ஹன்ரட் தொடரில் விளையாட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ரஷீட் கானின் உபாதை தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இவ்வார இறுதியில் அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரில், MI நியூயோர்க் அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த ரஷீட் கான் தற்போது ஹன்ரட் தொடரில் இல்லாத நிலையில் அவரின் இடத்தினைப் பிரதியீடு செய்ய பாகிஸ்தானின் சுழல் சகலதுறைவீரரான இமாத் வஸீம் அழைக்கப்பட்டுள்ளார்.
இமாத் வஸீம் தொடரின் ஹன்ரட் தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் ட்ரென்ட் ரொக்கேட் அணிக்காக ஆடிய பின்னர் அவரின் இடம் நியூசிலாந்தின் இஸ் சோதி மூலம் பிரதியீடு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தப் பருவத்திற்கான த ஹன்ரட் தொடரானது இன்று (01) தொடக்கம் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<