காலியில் நடைபெறும் இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் மற்றொரு வீரரும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது அணித்தலைவர் ரங்கன ஹேரத்தின் இடது கையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
அவரச சத்திரசிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ள அசேல குணரத்ன
காலியில் ஆரம்பமான இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று புதன்கிழமை (26)..
இந்திய அணித்தலைவர் விராட் கோலி சுழற்பந்து வீச்சாளர் டில்ருவன் பெரேரா வீசிய 36ஆவது ஓவரின் முதல் பந்தில் வேகமாக அடித்தபோது, அதனை ஷோட் எக்ஸ்ட்ரா கவர் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்ட ஹேரத் தடுக்க முயன்றார். அப்போது
அவரது நடுவிரலில் காயம் ஏற்பட்டது. உடன் அங்கு வந்த உடற்பயிற்சியாளர் அவரை மைதானத்தில் இருந்து அழைத்துச் சென்றார்.
“ரங்கனவுக்கு 2014 இல் அதே இடத்தில் முறிவு ஏற்பட்டது. அதில் ஐஸ் ஒத்தடம் வழங்கி இருக்கிறோம். தற்போது இது பற்றி பயப்படத் தேவையில்லை. சனிக்கிழமை காலை சரியாக என்னவென்று எமக்கு தெரிந்துகொள்ள முடியும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முறிவு ஏற்றபட்டதும் அவரது அதே விரலாகும். எனினும் எக்ஸ் ரே ஒன்று எடுத்து பார்த்தபோது எம்மால் எந்த முறிவையும் காண முடியவில்லை. வலி தொடர்ந்தால் நாம் MRI சோதனை ஒன்றை செய்யவுள்ளோம். நாம் ஐஸ் வைத்து
சிகிச்சை அளித்திருக்கிறோம், காலையில் என்னவென்று தெரியவரும். தற்போதைய நிலையில் அவர் கொழும்புக்கு அழைத்து செல்லவோ அல்லது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. அவரால் தொடர்ந்து பந்துவீச முடியுமா
என்று பார்ப்போம். அவரது இடது கையின் நடுவிரலிலேயே காயம் உள்ளது. அது வெறும் ஒரு சிராய்ப்பு என்றே நாம் நம்புறோம்” என்று இலங்கை அணி முகாமையாளர் அசங்க குருசிங்க மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு பின்னர் குறிப்பிட்டார்.
ஹேரத் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 9 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் இன்றி 36 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். போட்டியில் முழுமையாக இரு நாட்கள் உள்ள நிலையில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 498 என்ற இமாலய ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
ஆட்டத்தின் முதல் நாளில் லஹிரு திரிமான்னவின் பந்துவீச்சில் ஷிகர் தவானை ஸ்லிப் திசையில் பிடியெடுக்க முயன்ற அசேல குணரத்னவின் இடது கட்டை விரலில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை அணி ஏற்கனவே 10 வீரர்களுடனேயே ஆடி
வருகிறது. குணரத்ன இந்தியாவுடனான ஒட்டுமொத்த சுற்றுப் போட்டியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.