முரளிதரன் ஓய்வு பெற்ற பின் இலங்கை அணி பெற்ற சுழற்பந்து ஜாம்பவான் ரங்கன ஹேரத் புதியதோர் மைல்கல்லை எட்டியுள்ளார்.
கடந்த 19ஆம் திகதி இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் போது ரங்கன ஹேரத் 297 விக்கட்டுகளைக் கைப்பற்றி, 300 விக்கட்டுகளைக் கைப்பற்ற 3 விக்கட்டுகள் பின்னிலையில் இருந்தார்.
முதல் நாளில் பிரதீப் பிரகாசிப்பு
ஆனால் இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 2 விக்கட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று டர்ஹம் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் இரண்டாவது நாளான இன்றைய ஆட்டத்தின் போது ரங்கன ஹேரத் இங்கிலாந்து அணியின் ஸ்டீவன் பின்னின் விக்கட்டைக் கைப்பற்றியதன் மூலம் தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்வில் 300ஆவது விக்கட்டைக் கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
1999ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ரங்கன ஹேரத் இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29.75 என்ற பந்துவீச்சு சராசரியில் 300 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் ஒரு இனிங்ஸில் 5 விக்கட்டுகளைக் கைப்பற்றிய சந்தர்ப்பங்கள் 23 தடவைகளாகும் . ஒரு இனிங்ஸில் சிறந்த பந்துவீச்சுப் பிரதி 127 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருந்தமையாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்