கைது செய்யப்பட்ட ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

2704
Ramith Rambukwella

இலங்கை கிரிக்கட் அணி வீரர் ரமித் ரம்புக்வெல்ல இன்று (வியாழக்கிழமை) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார். விபத்து இடம்பெறும் நேரத்தில் ரமித் ரம்புக்வெல்ல மது போதையில் காரை செலுத்தியுள்ளார். இதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் யாருக்கும் காயங்கலோ, உயிர் ஆபத்தோ ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர கடந்த திங்கட்கிழமை மாலை கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடவத்த, ரன்முதுகல பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை இங்கு நினைவு கூறத்தக்கது.