பிக் பேஷ் லீக் (BBL) வீரர்கள் வரைவில் மேலும் மூன்று வீரர்கள்

Big Bash League 2022-23

380

பிக் பேஷ் லீக் 2022-23 பருவகாலத்துக்கான வீரர்கள் வரைவுக்கு இலங்கை அணியைச் சேர்நத மேலும் மூன்று வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் பரிந்துரைப்புக்கான காலம் உத்தியோகபூர்வமாக நிறைவுக்குவந்துள்ள நிலையில், 19 நாடுகளைச் சேர்ந்த 279 வீரர்கள் மொத்தமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

>> பிக் பேஷ் லீக் (BBL) வீரர்கள் ஏலத்தில் ஐந்து இலங்கை வீரர்கள்

இந்தப்பட்டியலில் ஏற்கனவே இலங்கை அணியைச் சேர்ந்த தினேஷ் சந்திமால், பிரபாத் ஜயசூரிய, மஹீஷ் தீக்ஷன, பானுக ராஜபக்ஷ மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகிய 5 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிப்பட்டியலில் மேலும் 3 வீரர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் டெஸ்ட் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரமேஷ் மெண்டிஸ் இந்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முதற்தர போட்டிகளில் விளையாடிவரும் துஷான் ஹேமந்த மற்றும் ருவாந்த கெல்லபொத்த ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

எவ்வாறாயினும் இறுதிநேரத்தில் வெளியான அறிவிப்பின்படி, முன்னணி சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன, இலங்கை அணியின் சர்வதேச தொடர்களை கருத்திற்கொண்டு (இந்திய தொடர்) பிக் பேஷ் லீக் வரைவிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பேஷ் லீக் போட்டித்தொடருக்கான வீரர்கள் வரைவு இம்மாதம் 28ம் திகதி நடைபெறவுள்ளதுடன், போட்டித்தொடர் எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத காலப்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள்

தினேஷ் சந்திமால், பிரபாத் ஜயசூரிய, மஹீஷ் தீக்ஷன (விலகியுள்ளார்), பானுக ராஜபக்ஷ, லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ், துஷான் ஹேமந்த, ருவாந்த கெல்லபொத்த

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<