இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரும், பந்துவீச்சுப் பயிற்சியாளருமான ஷம்பக்க ராமநாயக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் உயர்செயற்திறன் (High Performance) நிலையத்தினுடைய தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு உயிர்கொடுப்பதே எமது பணி – முரளிதரன்
பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் அடுத்ததாக கிரிக்கெட் சுற்றுத் தொடரில் விளையாடுகின்றது. இந்த சுற்றுத் தொடரின் போது பங்களாதேஷ் கிரிக்கெட் உயர்செயற்திறன் நிலையத்தின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த டோபி ரேட்போர்ட் இருக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றில் டோபி ரேட்போர்டினை பிரதியீடு செய்யும் ஷம்பக்க ராமநாயக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் உயர்செயற்திறன் நிலையத்தினுடைய தலைமைப் பயிற்சியாளராக நியமனம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
ஷம்பக்க ராமநாயக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் உயர்செயற்திறன் நிலையத்தின் தலைமைப் பயிற்சியாளராக மாறிவிருக்கும் விடயத்தினை, குறிப்பிட்ட உயர்செயற்திறன் நிலையத்தின் முகாமையாளரான ஜமால் பாபு Cricbuzz செய்திச் சேவையிடம் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
IPL வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்துள்ள வியாஸ்காந்த்
அதன்படி, பங்களாதேஷ் கிரிக்கெட் உயர்செயற்திறன் நிலையத்தின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மாறும் ஷம்பக்க ராமநாயக்கவின் ஆளுகையில் பங்களாதேஷ் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி முதலாவதாக அயர்லாந்துடன் நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டி ஒன்றிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு T20 போட்டிகளிலும் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு<<