ஜிம்பாப்வேயில் முதன்முறையாக ஆரம்பமாகவுள்ள ZIM-AFRO T10 தொடருக்காக இலங்கை அணியின் பானுக ராஜபக்ஷ மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 5 அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டித்தொடர் அடுத்த மாதம் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தொடருக்கான வீரர்கள் வரைவு அடுத்த மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முதல் முறையாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ICC உலகக் கிண்ணம்
குறித்த இந்த வீரர்கள் வரைவுக்கு முன்னர் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய அணிகளில் நான்கு வீரர்களை தக்கவைக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.
எனவே கேப் டவுன் சேம்ப் ஆர்மி அணியில் இலங்கை அணியின் வீரர்களான பானுக ராஜபக்ஷ மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோருடன் ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் கரீம் ஜனாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விபரம்
- ஹராரே ஹரிகேன்ஸ் – இயன் மோர்கன், எவின் லிவிஸ், ஷஹானவாஷ் தவானி, ரொபின் உத்தப்பா
- கேப் டவுன் சேம்ப் ஆர்மி – பானுக ராஜபக்ஷ, கரீம் ஜனாட், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், மஹீஷ் தீக்ஷன
- டர்பன் கெலண்டர்ஸ் – ஆசிப் அலி, சிசண்டா மகாலா, ஜோர்ஜ் லிண்டே, ஹஸரதுல்லாஹ் சஷாய்
- ஜோபர்க் பபலோஸ் – யூசுப் பதான், முஷ்பிகூர் ரஹ்மான், டொம் பெண்டன், நூர் அஹ்மட்
- புலவாயோ பிரேவ்ஸ் – சிக்கண்டர் ரஸா, அஷ்டன் டேர்னர், டைமால் மில்ஸ், பென் மெக்டர்மோர்ட்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<