இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வரும், நான்கு அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகளில் கென்யா மற்றும் மலேசிய அணிகள் வெற்றிகளை பெற்றுள்ளன.
இதன்மூலம் இலங்கை வீராங்கனைகள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறியுள்ளனர்.
இலங்கை சிரேஷ்ட மற்றும் மலேசிய அணிகளுக்கு வெற்றி
இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டியில் நடைபெற்று வரும் நான்கு…
கென்யா எதிர் இலங்கை கனிஷ்ட அணி
இலங்கை கனிஷ்ட அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய முதல் போட்டியில் கென்ய அணி 83-23 என்ற 60 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பதிவுசெய்தது.
போட்டியின் முதல் காற்பகுதியில் 21-07 என முன்னிலைப்பெற்ற கென்ய அணி தங்களுடைய முன்னிலையை இரண்டாவது காற்பகுதியில் நீடித்துக்கொண்டது. இரண்டாவது காற்பகுதியில் கென்ய அணி மேலதிகமாக 22 புள்ளிகளை பெற்றுக்கொள்ள, இலங்கை கனிஷ்ட அணியால் 2 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதன்படி இரண்டாவது காற்பகுதியில் 43-09 என்ற புள்ளிகளுடன் முன்னிலையடைந்த கென்யா அணி, மூன்றாவது காற்பகுதியில் 63-14 என்ற புள்ளிகளால் முன்னிலைப்பெற்றது. இறுதியாக இலங்கை கனிஷ்ட அணி சற்று சிறப்பாக விளையாடி 09 புள்ளிகளை பெற்றுக்கொண்ட போதும், 83-23 என்ற புள்ளிகள் கணக்கில் கென்யா அணி வெற்றிபெற்றது.
இலங்கை சிரேஷ்ட அணி எதிர் மலேசியா
இலங்கை சிரேஷ்ட அணி மற்றும் மலேசிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் மலேசிய அணி 47-39 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
போட்டியின் முதல் காற்பகுதியில் அபாரமாக ஆடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 10-03 என்ற முன்னிலையில் இருந்தாலும், பின்னர் சிறப்பாக ஆடிய மலேசிய அணி முன்னிலையை 11-09 என கட்டுப்படுத்தியது.
இதனையடுத்து ஆரம்பமாகிய இரண்டாவது காற்பகுதியில் மலேசிய அணி சிறப்பாக ஆட, போட்டியின் முதல் பாதி ஆட்டம் 22-22 என சமனிலையில் முடிவடைந்தது.
இலங்கை சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அணிகளை வீழ்த்திய கென்யா, மலேசியா
சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (08) ஆரம்பமான நான்கு அணிகளுக்கு…
தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது காற்பகுதியில் மலேசிய அணி இலங்கையை பின்னடையச் செய்து 34-30 என முன்னேறியது. பின்னர் இடம்பெற்ற இறுதி காற்பகுதியில் தங்களுடைய முன்னிலையை மேலும் அதிகரித்துக்கொண்ட மலேசிய அணி 47-39 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதன்படி, இலங்கை சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளதுடன், இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளன.
எனவே, இலங்கை சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அணிகள் நாளை மறுதினம் நடைபெறவுள்ள மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதவுள்ளன. இதேவேளை, முதலிடத்துக்கான போட்டியில் கென்யா மற்றும் மலேசிய அணிகள் நாளை மறுதினம் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<