முதல்பாதி அதிரடியில் ட்ரிபல்செவனிடம் வீழ்ந்தது போல்ட்டன்

292
Puttalam Drugons Trophy - Triple seven vs Bolton

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும்ட்ரகன்ஸ் லீக்” வெற்றிக் கிண்ணப் போட்டிகளில் 12வது போட்டியில் பொல்ட்டன் அணியை எதிர்த்தாடிய ட்ரிபல்செவன் அணி 4-0 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றி பெற்று, தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டி ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் ட்ரிபல்செவன் வீரர் ரனூஸ் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை லாபகமாகப் பெற்றுக்கொண்ட அணித் தலைவர் ரிபாஸ்தீன் பொல்ட்டன் கழகத்தின் தடுப்பு வீரர்களை தடுமாரச் செய்து கோல் கம்பத்திற்கு சற்று தொலைவிலிருந்து கோல் நோக்கி வேகமாக உயர்த்தி பந்தை அடித்தார். இதன்போது பொல்ட்டனின் கோல் காப்பாளர் ஜடாவின் தடுப்பு முயற்சி பயனில்லாமல் போக முதல் கோலை பதிவு செய்தது ட்ரிபல்செவன் அணி.

இறுதி நிமிட கோலால் வெற்றியை ருசித்தது புத்தளம் லிவர்பூல் அணி

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்தி வரும் ‘ட்ரகன்ஸ்…

பின்னர் 12வது நிமிடத்தில் பொல்ட்டன் அணிக்கு கிடைத்த ப்ரீக்கிக் வாய்ப்பை இஹ்சான் அடிக்க, அதை எந்த வித இடையூருமின்றி ட்ரிபல்வெசன் கோல் காப்பாளர் மாஹிர் பிடித்துக்கொள்ள பொல்ட்டனின் வாய்ப்பு வீணானது.

மேலும், போட்டியின் 17வது நிமிடத்தில் பொல்ட்டன் வீரர் அப்துல்லாஹ் வழங்கிய பந்தினை பெற்றுக்கொண்ட அறூஸ் கோல் கம்பம் நோக்கி அடிக்க பந்து கம்பத்திற்கு அருகாமையால் சென்று ஏமாற்றமளித்தது.

போட்டியின் 19வது நிமிடத்தில் ட்ரிபல்வெசன் கழகத்திற்கு கிடைத்த கோர்ணர் கிக் வாய்ப்பை ரிபாஸ்தீன் அடிக்க, உயர்ந்து வந்த பந்தை கோல் காப்பாளர் ஜடா கையால் தட்டிவிட்டார். பந்து மீண்டும் ட்ரிபல்செவன் வீரர் கையூமின் கால்களுக்கு வர, வந்த வேகத்திலே பந்தை மீண்டும் கம்பத்திற்குள் அனுப்பி தனது அணிக்கான இரண்டாவது கோலை அவர் பதிவு செய்தார்.

கோல் அதிர்ச்சியில் இருந்து பொல்ட்டன் கழகம் மீள்வதற்குள் போட்டியின் 23வது நிமிடத்தில் ட்ரிபல்செவனின் முன்கள வீரர் சக்கீன் வழங்கிய சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை லாபகமாகப் பெற்றுக்கொண்ட ரிபாஸ்தீன் போல்ட்டனின் தடுப்பு வீரர்களை இலகுவாக நிலைகுலையச் செய்து கோல் கம்பத்திற்குள் அடித்தார். பந்து எந்தவொரு தடையுமின்றி உள்நுழைய ரிபாஸ்தீனின் கோல் கணக்கு இரட்டிப்பாக அணி 3-0 என வலுவடைந்தது.

போட்டியின் 33வது நிமிடத்தில் பொல்ட்டன் கழகத்தின் அப்துல்லாஹ் வழங்கிய பந்தினை முஸ்தகீன் பெற்று ட்ரிபல்செவனின் 2 தடுப்பு வீரர்களையும் தாண்டி கோல் நோக்கி பந்தை அடித்தார். எனினும் அதை இலகுவாக கையால் தட்டி கம்பத்திற்கு மேலால் அனுப்பினார் கோல் காப்பாளர் மாஹிர்.

போட்டியின் 41வது நிமிடத்தில் ரிபாஸ்தீன் இரண்டு வீரர்களை கடந்து பந்தினை சாபிக்கிற்கு கொடுக்க, பந்தினை பெற்ற சாபிக் கோல் கம்பத்திற்கு சற்று தூரத்திலிருந்து கோல் நோக்கி அடித்தார். எனினும் பந்து கம்பத்திற்கு மேலால் செல்ல இலகுவான கோல் வாய்ப்பு தகர்ந்து போனது.

முதல் பாதி ஆட்டம்: ட்ரிபல்செவன் வி. 3 – 0 பொல்ட்டன் வி.

முதற்பாதியில் ட்ரிபல்செவனின் முன்கள வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்ததால் இரண்டாம் பாதியில் பொல்ட்டன் கழகம் தனது பின்கள தடுப்பு வீரர்களை சற்று அதிகரித்திருந்தது.  

போட்டியின் 49வது நிமிடத்தில் ட்ரிபல்செவன் வீரர் சக்கீன் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை சபாக் பெற்று கோல் கம்பத்திற்குள் அடிக்க, ஜடா பந்தை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஈடுபட்டார். இதன்போது பந்து கம்பத்தில் பட்டு வெளியேற ட்ரிபல்செவன் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.  

மேலும் 55வது நிமிடத்தில் ட்ரிபல்செவன் அணிக்கு கோணர் கிக் வாய்ப்புக் கிடைக்க அதை ரிபாஸ்தீன் உயர்த்தி அடிதார். அதனை சக்கீன் தலையால் முட்டி கோலாக்க முயல, பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.

இடைநீக்கப்பட்ட அணிகள் மீண்டும் ஐ.பி.எல் தொடரில்

ஸ்பொட்-பிக்சிங் ஊழல் (Spot fixing scandal) நிர்ணய சர்ச்சையில் இரண்டு….

போட்டியின் 63வது நிமிடத்தில் பொல்ட்டன் கழகத்தின் அறூஸ் வழங்கிய பந்தினை பெற்றுக்கொண்ட இஹ்சான் இலகுவாக கோலாக்க வேண்டிய பந்தை கோல் காப்பாளர் மாஹிரின் கைகளுக்கே அடிக்க, கிடைத்த ஒரே வாய்ப்பும் வீணானது.   

போட்டியின் 69வது நிமிடத்தில் ரிபாஸ்தீன் சிறப்பாக கொடுத்த பந்தை பெற்ற சகீன், அதனை கோல் கம்பத்திற்குள் அடிதார். எனினும் நடுவர் அலி ஓப்சைட் என அறிவிக்க அந்த முயற்சியும் வீணாகிப்போனது.  

மீண்டும் போட்டியின் 75வது நிமிடத்தில் ரிபாஸ்தீன் மைதானத்தின் நடுப் பகுதியிலிருந்து பந்தை உயர்த்தி அடிக்க, அதை சக்கீன் தன் தலையால் முட்டி கோல் கம்பத்திற்குள் அனுப்பினார். இதன்போது, கோல் காப்பாளர் ஜடா முயற்சிக்கமுன் பந்து கோல் கம்பத்தினுள் சரணடைந்தது.  

பொல்ட்டன் கழக வீரர்கள் கோல் அடிப்பதை விட கோலை தடுப்பதிலேயே தீவிரமாக செயற்பட்டனர். ஆனால் ட்ரிபல்செவனின் முன்கள வீரர்கள் பொல்ட்டனின் பகுதிகளை ஆக்கிரமிப்பதிலேயே தன் கவனத்தைச் செலுத்தினர்.

குமார் சங்கக்கார விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா?

தமது தரப்பினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து…

போட்டியின் 80வது நிமிடத்தில் பொல்ட்டன் கழக இளம் முன்கள வீரர் அர்கம் வழங்கிய சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை பெற்றுக்கொண்ட ஆக்கிப் கோல் நோக்கி உதைந்தார். இதன்போது பந்து கம்பத்திற்கு அருகாமையால் வெளியே சென்றது.

பின்னர் 87வது நிமிடத்தில் ட்ரிபல்செவன் வீரர் கையூம் வழங்கிய பந்தை ரனூஸ் கோல் கம்பம் நோக்கி வேகமாக அடிக்க அதனை சிறப்பாகப் பிடித்துக் கொண்டார் ஜடா.  

போட்டி நிறைவடைவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் (89வது நிமிடம்) ரிபாஸ்தீன் கோல் கம்பத்திற்கு சற்று தொலைவிலிருந்து வேகமாக அடிக்க அதை ஜடா சிறப்பாகச் செயற்பட்டு கையால் குத்திவிட பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.  

ட்ரிபல்செவனின் அந்த முயற்சியே போட்டியின் இறுதி முயற்சியாக இருந்தது. இதன் காரணமாக ஆட்ட நிறைவில் 4-0 என இலகு வெற்றி பெற்ற ட்ரிபல்செவன் அணி 6 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.  

முழு நேரம்: ட்ரிபல்செவன் வி. 4 – 0 பொல்ட்டன் வி.

கோல் பெற்றவர்கள்

ட்ரிபல்செவன் விளையாட்டுக் கழகம்

ரிபாஸ்தீன் – 2’ & 23’, கையூம் 19’, சக்கீன் 75’