த்ரீஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் 2-0 என வெற்றி பெற்ற நியுஸ்டார் விளையாட்டுக் கழகம் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் நடாத்தும் ‘ட்ரகன்ஸ் லீக் -2017′ சுற்றுப் போட்டியின் தரப்படுத்தலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சுற்றுத் தொடரின் 15வது லீக் ஆட்டம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் பெருந்திரளான உதைப்பந்தாட்ட ரசிகர்களின் ஆரவாரத்தோடு இடம்பெற்றது.
மூன்றாவது தொடர் வெற்றியில் புத்தளம் விம்பில்டன் அணி
இப் போட்டியில் விம்பில்டன் விளையாட்டுக் கழகம் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் நியூ ப்ரண்ஸ்
போட்டி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பந்து சம விகிதத்தில் இரு அணி வீரர்களின் கால்களிலும் காணப்பட்டது. நியுஸ்டார் கழகத்தின் முன் கள வீரர்கள் சற்று வேகமான ஆட, த்ரீஸ்டார் அணியின் தடுப்பு வீரர்கள் கோல் கம்பத்தை நெருங்கவிடாது காத்து நின்றனர்.
போட்டியின் 7வது நிமிடத்தில் நியுஸ்டாரின் முன்கள வீரர் சாஜித் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற பைக்கர் வேகமாக கம்பம் நோக்கி உதைக்க அதை த்ரீஸ்டார் கோல்காப்பாளர் நிப்ராஸ் துரிதமாக செயற்பட்டு பந்தைப் பிடித்துக்கொண்டார்.
மேலும் 12வது நிமிடத்தில் த்ரீஸ்டார் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. அதை அஹ்சாம் பொறுப்பேற்று அடிக்க உயர்ந்து வந்த பந்தை இலகுவாக பிடித்துக் கொண்டார் நியுஸ்டார் கோல்காப்பாளர் வசீம்.
மீண்டும் போட்டியின் 20வது நிமிடத்தில் நியுஸ்டார் வீரர் முஸ்பிக் வழங்கிய உயரமான பந்துப் பரிமாற்றத்தை அஸ்பான் தலையால் முட்ட பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்றது.
மேலும் 5 நிமிடங்கள் கடந்து நியுஸ்டார் கழகத்தின் இளம் வீரர் பைக்கர் வழங்கிய சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை சர்பி வேகமாக கம்பம் நோக்கி அடிக்க நிப்ராஸ் அதை பாய்ந்து தடுத்தார். எனினும் அவரின் கைகளில் பட்டவாரே பந்து கம்பத்திற்குள் செல்ல நியுஸ்டார் கழகம் போட்டியின் முதல் கோலைப் பெற்று முன்னிலையடைந்தது.
போட்டியின் 35வது நிமிடத்தில் நியுஸ்டாரின் அஸ்பான் கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க அதை உயரே எழுந்து சாஜித் தலையால் முட்டி கோலாக்க முயல, பந்து கம்பத்திற்கு மேலால் சென்றமையினால் சிறந்த முயற்சி வீணாகிப்போனது.
மீண்டும் 40வது நிமிடத்தில் நியுஸ்டார் அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை கோல் காப்பாளர் வசீம் பொறுப்பேற்று அடிக்க, பந்து கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.
இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்கள் பணி நீக்கம்
இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர்களை
முதல் பாதி நிறைவுற அண்மித்த நிலையில், த்ரீஸ்டார் வீரர் றினாஸ் கொடுத்த உயரமான பந்துப் பறிமாற்றத்தை அஹ்சாம் பாய்ந்து தலையால் முட்ட பந்து கம்பத்தின் மேலால் சென்றது. இது முதல் பாதியின் இறுதி முயற்சியாக இருந்தது.
முதல் பாதி: நியுஸ்டார் விளையாட்டுக் கழகம் 1 – 0 த்ரீஸ்டார் விளையாட்டுக் கழகம்
நியுஸ்டாரின் வீரர்கள் ஆதரவாளர்களின் பலத்த கரகோசத்தோடு கோல்களை இலக்கு வைத்து இரண்டாம் பாதியில் களமிறங்க அதை தடுத்து போட்டியை சமப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு களமிறங்கினர் த்ரீஸ்டார் வீரர்கள்.
போட்டியின் 46வது நிமிடத்தில் த்ரீஸ்டார் அணிக்கு கிடைத்த கோணர் கிக் வாய்ப்பை இன்சாப் அடிக்க, உயர்ந்து வந்த பந்தை பஸ்மிர் தலையால் முட்டி கம்பத்திற்குள் அனுப்பினார். எனினும், பந்து கையில் பட்டதாகத் தெரிவித்த நடுவர் அந்த கோலை நிராகரித்தார்.
போட்டியின் 50வது நிமிடத்தில் நியுஸ்டார் வீரர் சர்பி கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க அதை அஸ்பான் உயரே எழுந்து தலையால் முட்டி கோல் கம்பத்திற்குள் அனுப்ப நியுஸ்டாரின் கோல் கணக்கு இரட்டிப்பானது.
நியுஸ்டாரின் தடுப்பு வீரர்கள் த்ரீஸ்டாரின் முன்கள வீரர்களை தங்கள் பகுதிக்குள் முன்னேற விடாமல் சிறப்பாய்ச் செயல்ப்பட்டமையினால், த்ரீஸ்டாரின் முன்கள வீரர்களின் பல முயற்சிகள் பலனில்லாமல் போனது.
போட்டியின் 55வது நிமிடத்தில் நியுஸ்டார் அணிக்குக் கிடைத்த ப்ரீக்கிக் வாய்ப்பை அவ்சப் அடிக்க பந்து நேராக சென்று கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்குள் வர அதை த்ரீஸ்டாரின் தடுப்பு வீரர் மைதானத்திற்கு வெளியே அடித்தனர்.
மீண்டும் போட்டியின் 61வது நிமிடத்தில் நியுஸ்டாரின் சாஜித் கொடுத்த பந்தினைப் பெற்ற அத்பான் த்ரீஸ்டாரின் 3 தடுப்பு வீரர்களை நிலைகுலையச் செய்து கம்பம் நோக்கி அடித்தார். அதை நிப்ராஸ் பாய்ந்து தடுக்க முட்பட அவரின் கால்களுக்கு இடையால் பந்து கம்பத்தின் அருகில் சென்றுகொண்டிருக்கையில், சிறப்பாக செயற்பட்ட தடுப்பு வீரர் பந்தை வெளியேற்றி கோல் வாய்ப்பை முறியடித்தார்.
போட்டியின் 75வது நிமிடத்தில் த்ரீஸ்டாரின் வீரர் ஜெல்சான் கோல் கம்பத்திற்கு சற்று தொலைவிலிருந்து கம்பம் நோக்கி வேகமாக அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் செல்ல அவ்வணியின் மற்றொரு வாய்ப்பும் வீணானது.
மேலும், போட்டியின் 81வது நிமிடத்தில் நியுஸ்டாரின் இன்ஷாப் கொடுத்த பந்தினை சாஜித் வந்த வேகத்திலே கம்பம் நோக்கி உதைக்க பந்து கம்பத்தின் அருகாமையால் சென்று வெளியேறியது.
இரு அணியினரின் கோல் முயற்சிகளும் இரு அணித் தடுப்பு வீரர்களால் முறியடிக்கப்பட போட்டியின் இறுதிக்கட்டம் விறுவிறுப்பில் காணப்பட்டது.
பெனால்டியில் வென்று கிண்ணத்தை சுவீகரித்தது யங்ஹென்றீசியன்
விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இன்றி நடைபெற்று முடிந்த வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கின் முன்னாள்
போட்டியின் 89வது நிமிடத்தில் த்ரீஸ்டார் கழகத்திற்குக் கிடைத்த ப்ரீக்கிக் வாய்ப்பை இன்ஷாப் பொறுப்பேற்று அடிக்க, கம்பம் நோக்கி உயர்ந்து வந்த பந்தை வசீம் கையால் தட்டி வெளியேற்ற த்ரீஸ்டாரின் இறுதி முயற்சியும் பயனலிக்காமல் போனது.
இறுதியில் போட்டி நிறைவு பெற்றதாய் நடுவர் அறிவிக்க தலை சிறந்த இளம் வீரர்களைக் கொண்ட நியுஸ்டார் விளையாட்டுக் கழகம் 2 கோல்களினால் அனுபவமிக்க த்ரீஸ்டார் கழகத்தை வீழ்த்தி ஹட்ரிக் வெற்றியுடம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
முழு நேரம்: நியுஸ்டார் விளையாட்டுக் கழகம் 2 – 0 த்ரீஸ்டார் விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
நியுஸ்டார் விளையாட்டுக் கழகம்
சர்பி 25’, அஸ்பான் 50’
மஞ்சள் அட்டை
த்ரீஸ்டார் விளையாட்டுக் கழகம்
றினாஸ் 40’, ஹக் 55’