இங்கிலாந்தில் நடைபெறவிருந்த கௌண்டி கிரிக்கெட் தொடரில் க்ளொஸ்செஷ்டர்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இந்திய அணியின் முன்னவரிசை துடுப்பாட்ட வீரர் செட்டேஸ்வர் புஜாராவின் ஒப்பந்தம் நீக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 15 வருட காலப்பகுதியில் முதன்முறையாக கௌண்டி கிரிக்கெட் தொடரின் முதல் டிவிஷன் போட்டிகளில் விளையாடவிருந்த க்ளொஸ்செஷ்டர்ஷையர் கிரிக்கெட் கழகத்திற்கு ஏமாற்றமும் கிடைத்துள்ளது.
பங்களாதேஷ்-அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் இடையில் நடைபெறவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ……..
உலகளாவிய ரீதியில் தீவிரமாக பரவிவரும் கொவிட்-19 வைரஸ் (கொரோனா வைரஸ்) காரணமாக எதிர்வரும் மே 28ம் திகதிவரை இங்கிலாந்தில் நடைபெறவிருந்த கௌண்டி போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தங்களது அணிக்காக செட்டேஸ்வர் புஜாரா விளையாட மாட்டார் என்பதையும் க்ளொஸ்செஷ்டர்ஷையர் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள க்ளொஸ்செஷ்டர்ஷையர் கழகம், “எதிர்வரும் மே மாதம் இறுதிவரை எந்தவொரு போட்டிகளும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் அட்டவணைப்படுத்தப்படவில்லை. கொவிட்-19 காரணமாக சர்வதேச ரீதியில் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளும் இந்த பருவகாலத்தில் நடைபெறாமை ஏமாற்றத்துக்குறியது.
குறிப்பாக, இந்த பருவகாலத்துக்காக நாம் அதிகமான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுடிருந்தோம். காரணம் இது எம்முடைய 150வது ஆண்டு நிறைவாகும். ஆனால், இந்த பருவகாலத்தின் போட்டிகள் பிற்போடப்பட்டு வருகின்றமையானது எமது அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு அதிகமான ஏமாற்றத்தை தருகிறது.
அதேநேரம், நாம் அனைவரும் அணியில் இணைக்கப்பட்டிருந்த இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் செட்டேஸ்வர் புஜாராவை இழந்திருக்கிறோம். எனினும், இந்த பருவகால போட்டிகளுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் இந்த வருடத்திற்கான விஸ்டனின் சிறந்த வீரர் விருதை தட்டிச் …..
இந்திய அணியின் செட்டேஸ்வர் புஜாரா க்ளொஸ்செஷ்டர்ஷையர் கழகத்துக்காக 6 கௌண்டி சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், கொவிட்-19 காரணமாக அவரது ஒப்பந்தம் மீளப்பெறப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஏற்கனவே, கௌண்டி சம்பியன்ஷிப்பின் முன்னணி அணியான சர்ரே கழகத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் மைக்கல் நேசர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<