இரவு 11 மணிக்குத் தொடங்கும் PSL போட்டிகள்!

Pakistan Super League - 2021

200
PSL Twitter

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த வருடத்திற்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) T20 போட்டிகள் ஜூன் 9ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் பங்கேற்ற வீரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும், அணி உரிமையாளர்களும் கலந்து பேசி, பாகிஸ்தான் சுப்பர் லீக்கை ஒத்திவைப்பதாக கடந்த மார்ச் 4ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இந்த வருட பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியின் 34 ஆட்டங்களில் 14 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

இதனையடுத்து எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

ஆறு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சுப்பர் லீக் ஒத்திவைப்பு

இதன்படி, பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரை அபுதாபியில் ஜூன் 5ஆம் திகதி முதல் ஜூன் 20ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி வீரர்கள், ஊழியர்கள், நடுவர்கள் என அனைவரும் அபுதாபி சென்றடைந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்டுப்படுத்தப்பட்டனர்

ஆனால், தொலைக்காட்சி ஒளிபரபரப்பு குழுக்களுக்கு அனுமதி தர அபுதாபி அரசு இழுபறி செய்து வந்தது. குறிப்பாக இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த குழுக்களுக்கு அனுமதி கிடைக்காமலேயே இருந்தது

இதே போல் முன்னதாக வீரர்களின் விமானம் தரையிறங்குவதிலும் அனுமதி பெற தாமதமானது. இதனால் தொடரின் அட்டவணையும் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து அனுமதிகளையும் அபுதாபி அரசிடம் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றுக்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்ககை அபுதாபியில் நடத்த அனுமதி

இதனால் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் புதிய திகதிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டிகள் ஜூன் 9ஆம் திகதி முதல் ஜூன் 24ஆம் திகதி வரை அபுதாபியில் உள்ள ஷெய்க் ஷைட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இதில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் என ஆறு நாட்களுக்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. அபுதாபி நேரப்படி முதலாவது போட்டி மாலை 5 மணிக்குத் தொடங்கும். பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு முதலாவது போட்டியும், இரண்டாவது போட்டி இரவு 11 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி, அபுதாபியில் நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட், லாகூர் கௌண்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…