பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் ஸ்மித்துக்குப் பதிலாக ரஸல் ஒப்பந்தம்

241
Image courtesy - Cric info

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 4ஆவது பருவகால பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்) டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான அன்ட்ரூ ரஸல், முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

தென்னாபிரிக்க முன்னாள் தலைவர் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து திடீர் ஓய்வு

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சகலதுறை வீரர் ஜொஹான் போதா சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு

இவ்வருடத்துக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டித் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 17ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இப்போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 2 வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் தமது இறுதி அணியை உறுதி செய்து மாற்று வீரர்களை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நேற்று (24) கராச்சியில் இடம்பெற்றது.

இதில் தற்போது நடைபெற்றுவரும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் முழங்கை உபாதைக்குள்ளாகி நாடு திரும்பிய அவுஸ்திலேரலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக அன்ட்ரூ ரஸலை ஒப்பந்தம் செய்ய முல்தான் சுல்தான்ஸ் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் முதல் ஏழு போட்டிகளில் அவ்வணிக்காக அன்ட்ரூ ரஸல் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவரும் டி-20 லீக் போட்டித் தொடர்களில் விளையாடிவரும் அன்ட்ரூ ரஸல், பாகிஸ்தான் சுப்பர் லீக் சம்பியன் பட்டத்தை இரண்டு தடவைகள் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடியிருந்தார். அத்துடன், 2016 பருவகாலத்தில் அதிக விக்கெட்டுக்களைக் (16) கைப்பற்றிய வீரராகவும் மாறினார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இத்தொடருக்கான வீரர்களை இணைக்கும் ஏலத்தில் அன்ட்ரூ ரஸலை ஒப்பந்தம் செய்வதற்கு எந்தவொரு அணியும் முன்வரவில்லை. எனினும், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்மித், உபாதை காரணமாக விலகியதால், அவரின் இடத்துக்கு மாற்று வீரராக அன்ட்ரூ ரஸல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டேவிட் வோர்னருக்கு நாடு திரும்புமாறு அதிரடி உத்தரவு..!

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடிவந்த டேவிட் வோர்னருக்கு உபாதை ஏற்பட்டதன்

இதேநேரம், முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டமை தொடர்பில் அன்ட்ரூ ரஸல் கருத்து வெளியிடுகையில், ”உலகில் நடைபெறுகின்ற முக்கியமாக டி-20 லீக் தொடர்களில் தரமான போட்டித் தொடராக பாகிஸ்தான் சுப்பர் லீக் விளங்குகின்றது. இதில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் விளையாடவுள்ளனர். அதேபோல சொயிப் மலிக் மற்றும் சஹீட் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் முல்தான் சுல்தான்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளதால் இம்முறை போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும்” என தெரிவித்தார்.

இதனிடையே, முல்தான் சுல்தானஸ் அணிக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து வீரரான ஜோ டென்லியும் உபாதை காரணமாக இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எனவே, டென்லியின் இடத்துக்கு சக நாட்டு வீரரான ஜேம்ஸ் வின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வருகின்ற பிக்பேஷ் டி-20 லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடிவரும் 27 வயதுடைய ஜேம்ஸ் வின்ஸ், அடுத்தடுத்து இரண்டு அரைச்சதங்களை குவித்து அசத்தினார். எனினும், இதுவரை 16 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4, 166 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பெஷாவர் சல்மி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான வகார் சலாம்கேலுக்குப் பதிலாக, மேற்கிந்திய தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அன்ட்ரூ ப்ளெட்சரை ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடிய அவர், 5 போட்டிகளில் பங்குபற்றி 86 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

ஹார்திக் பாண்டியா, கே.எல் ராகுலின் தடை நீங்கியது

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மீது விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீங்குவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை, குவாட்டா கிளெட்டியேட்டர்ஸ் அணிக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் டுவைன் பிராவோ, பெப்ரவரி கடைசி வாரமளவில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இணைந்து கொள்ளவுள்ளதால் அவருக்குப் பதிலாக சக நாட்டு வீரரான டுவைன் ஸ்மித்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான டுவைன் ஸ்மித், முன்னதாக இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெஷாவர் சல்மி ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள 6 அணிகளுக்கும் மேலும் ஒவ்வொரு உள்ளூர் வீரர்களை இணைத்துக்கொள்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இதன்போது அனுமதி வழங்கியது.

இதன்படி, சகலதுறை வீரரான ஹமாத் அஸாமை முல்தான் சுல்தான்ஸ் அணியும், மத்திய வரிசை வீரரான சாத் அலியை லாஹுர் க்ளெண்டர்ஸ் அணியும், மொஹமட் இர்பான் (ஜுனியர்) மற்றும் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான உமேர் கானை முறையே குவாட்ட கிளெட்டியேட்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் ஆகிய அணிகளும் ஒப்பந்தம் செய்தன. எனினும், பெஷாவர் சல்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் ஆகிய அணிகள் இதுவரை எந்தவொரு வீரரையும் அறிவிக்கவில்லை.

இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக் டி-20 போட்டித் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அபுதாபியில் நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் நடப்புச் சம்பியன் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, லாஹுர் க்ளெண்டர்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க