பிரான்ஸின் முன்னாள் கால்பந்து வீரரான இமானுவேல் பெடிட், தனது நாட்டின் இளம் கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்வேயிற்கு முன்னணி வீரர் நெய்மாருடன் இணைவது குறித்து எச்சரிக்கை ஒன்றினை விடுத்திருக்கின்றார்.
பார்சிலோனாவுக்கு விளையாட மறுப்பு தெரிவித்த ரொனால்டோ
மன்செஸ்டர் யுனைடட் கழகத்திடம் இருந்து…………….
கிலியான் எம்பாப்வே, பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் நெய்மாருடன் அதிகம் இணைவது, கிலியான் எம்பாப்வேயின் கால்பந்து வாழ்க்கைக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதே குறித்த எச்சரிக்கையாகும்.
கிலியான் எம்பாப்வேயும், நெய்மாரும் பிரான்ஸின் பரிஸ் செய்ண்ட் ஜெர்மெய்ன் (PSG) கழகத்திற்காக கால்பந்து விளையாடி வருகின்றனர். இந்த கழகத்தில் இரண்டு வீரர்களினதும் நெருக்கத்தினைக் கண்ட நிலையிலையே இமானுவேல் பெடிட் இன் எச்சரிக்கை வெளியாகியிருக்கின்றது. தனது எச்சரிக்கையில் நெய்மார் தொடர்பான அவதானத்தை பேசிய இமானுவேல் ”அவரின் (நெய்மாரின்) அணுகுமுறை குறித்து (கிலியான் எம்பாப்வே) அவதானமாக இருக்க வேண்டும்.” என்றார்.
பிரான்ஸ் இறுதியாக நடைபெற்ற கால்பந்து உலகக் கிண்ணத்தினை வெல்ல முக்கிய காரணமாக இருந்த முன்களவீரரான கிலியான் எம்பாப்வே 180 மில்லியன் யூரோக்களுக்கு PSG கழகத்தினால் கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
PSG கழகத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் 22 வயது நிரம்பிய கிலியான் எம்பாப்வே இதுவரை 72 போட்டிகளில் விளையாடி 49 கோல்களை பெற்றிருப்பதோடு, PSG கழகம் ஐந்து முக்கிய கால்பந்து கிண்ணங்களை வெல்ல உதவியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிலியான் எம்பாப்வேவின் தற்போதைய கால்பந்து விளையாட்டு பற்றி பேசியிருந்த இமானுவேல் பெடிட், எம்பாப்வே இந்த சிறிய வயதில் மிகவும் முதிர்ச்சி தன்மையுடன் கால்பந்து போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்தார்.
அதோடு கிலியான் எம்பாப்வே Ballon d’Or என அழைக்கப்படும் பிரான்ஸ் செய்தி சஞ்சிகையின் சிறந்த கால்பந்து வீரருக்கான ”தங்கப்பந்து” விருதினை வெல்வதற்கு அதிக சிரத்தையினை எடுத்து கால்பந்து போட்டிகளில் விளையாட வேண்டும் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<