உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகை விபரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி 2019-21ம் ஆண்டு பருவகாலத்தில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையிலிருந்து ஐசிசி எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை.
>> இலங்கை – ஆப்கான் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்குமான மொத்த பரிசுத்தொகையாக 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் சுமார் 114 கோடி) அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள நிலையில், வெற்றிபெறும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதுடன், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
மூன்றாவது இடத்தை பிடித்துள்ள தென்னாபிரிக்க அணிக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், 4வது இடத்தை பிடித்துள்ள இங்கிலாந்து அணிக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளன.
அதேநேரம் இறுதிப்போட்டிக்கான போட்டியில் கடைசிவரை இருந்து ஐந்தாவது இடத்தை பிடித்துக்கொண்ட இலங்கை அணிக்கு 2 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் சுமார் 6 கோடி) வழங்கப்படவுள்ளதுடன், அடுத்த நான்கு இடங்களை பிடித்துக்கொண்ட நியூசிலாந்து, பாகிஸ்தான், மே.தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு தலா ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<