இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஒழுங்கு செய்திருக்கும், ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் 3ஆது பருவகாலம், செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது.
சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் இந்த ஆண்டுக்கான தொடர், இலங்கைத் தீவில் கால்பந்து விளையாட்டில் முன்னணியில் உள்ள இருபது முன்னணி பாடசாலைகள் இடையில் 20 வயதின் கீழ்ப்பட்ட வீரர்களுக்காக நடாத்தப்படும் முன்னணி கால்பந்து போட்டித் தொடராக காணப்படுகின்றது.
மீண்டும் கலைகட்டவுள்ள Deedat ஸாஹிரா சூப்பர் 16 – 2022
சிறந்த திட்டமின்றி இலங்கை கால்பந்தை முன்னேற்ற முடியாது – அமானுல்லா
2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான இறுதிப் போட்டியில் கொழும்பு புனித பேதுரு கல்லூரியை (St. Peter’s College) தோற்கடித்த கொழும்பு ஸாஹிரா கல்லூரி தொடரின் நடப்புச் சம்பியன்களாக காணப்படுகின்றது.
தொடரின் முதல் சுற்றில் ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறவுள்ளதோடு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
குழு A – ஸாஹிரா கல்லூரி – கொழும்பு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, பதுரியா மத்திய கல்லூரி – மாவனல்லை, புனித செபஸ்டியன் கல்லூரி – கட்டுனேரிய, முஸ்லிம் மத்திய கல்லூரி – களுத்துறை
குழு B – புனித பேதுரு கல்லூரி – கொழும்பு, அல்-அக்ஸா கல்லூரி – கிண்ணியா, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – நீர்கொழும்பு, புனித பெனடிக்ட் கல்லூரி – கொழும்பு, தர்மதூத கல்லூரி – பதுளை
குழு C – புனித ஜோசப் கல்லூரி – கொழும்பு, டி மெசனோட் கல்லூரி – கந்தானை, றோயல் கல்லூரி – கொழும்பு, ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி – கொழும்பு, கிங்ஸ்வூட் கல்லூரி – கண்டி
குழு D – புனித பத்திரிசியார் கல்லூரி – யாழ்ப்பாணம், புனித ஹென்ரியரசர் கல்லூரி – யாழ்ப்பாணம், கேட்வே கல்லூரி – கொழும்பு, ஸாஹிரா கல்லூரி – கம்பளை, தர்ஸ்டன் கல்லூரி – கொழும்பு
இலங்கைத் தீவில் உள்ள இளைய தலைமுறை வீரர்களிடையே கால்பந்து விளையாட்டை வளர்ப்பதே, கடந்த 2018ஆம் ஆண்டில் இது போன்றதொரு கால்பந்து தொடரினை ஆரம்பிப்பதன் முக்கிய நோக்கமாக காணப்பட்டிருந்தது.
பலத்த காயத்துக்கு மத்தியில் முழுப்போட்டியையும் விளையாடிய RONALDO | FOOTBALL ULAGAM
தொடரின் முதல் இரண்டு பருவகாலங்களிலும், கால்பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் தமது முயற்சியில் ThePapare.com பெரும் வெற்றி பெற்ற போதிலும், இந்த தொடரின் முன்னேற்றம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட்-19 வைரஸின் தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்தது.
எனினும், இந்த ஆண்டு (2022) இந்த கால்பந்து தொடரின் மீள் தொடக்கமானது இலங்கையில் இந்த அழகான விளையாட்டின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கும் செயற்பாடாக இருக்கும் என எங்களால் நம்பப்படுகின்றது. அத்துடன் இந்த செயற்பாட்டுக்கு மேலும் உரமூட்டும் நோக்குடன் தொடரின் முதலாவது சுற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில போட்டிகளுடன் தொடரின் காலிறுதி தொடக்கம் தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ThePapare.com இல் நேரடி அஞ்சல் (Live Stream) செய்யப்படவிருக்கின்றது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<